பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தமிழில் அறிவியல் செல்வம் கிவிக்கானோடு உயிரியம் சேர்ந்த சேர்க்கைப் பொருளாகும். அலுமினியம் 74 பங்கு இது களிமண்ணில் அதிகமாகக் காணப் பெறுகின்றது. இரும்பு 47 பங்கு இஃது உயிரியத்தோடு சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. கால்சியம் என்ற சுண்ணாம்புச் சத்து 34 பங்கு சோடியம் என்ற பொருள் 24 பங்கு இது சோற்றுப்பில் காணப்படும் பொருளாகும். பொட்டாசியம் 24 பங்கு இஃது அபிரகம் trico முதலியவற்றில் உள்ளது. மக்னீஷியம் 19 பங்கு இது கடல் நீரிலும் உண்டு. பெட்ரோமாக்ஸ் விளக்கில் திரியாக எரிவதற்கு வெள்ளச்சல்லடை போல் உறையாகப் போடப் பெற்றிருப்பது இப்பொருளே. நீரியம் 9 பங்கு. இது நீரில் உள்ளது. நீரில் ஒன்பதில் ஒருபங்கு இப்பொருளே. டைட்டானியம் என்பது 5 பங்கு. இது மண்ணிலும், மனலிலும் கானக் கிடக்கின்றது. குளோரின் என்பது 2 பங்கு இது சோடியத்துடன் சேர்ந்து சேர்க்கைப் பொருளாகக் கிடைக்கின்றது. பாஸ்வரம் ஒரு பங்கு எருவிற்கு இன்றியமையாத பொருள் இது. இந்தப் பன்னிரண்டு பொருள்களே உலகில் 99 பங்கானால் மிகுந்து நிற்கும் 80 ஆடிப் பொருள்களும் (தனிமங்களும் 9 பங்கு அளவே இருக்கக் காண்கிறோம். பெயரிடும் முறை : இவ்வுலகிலுள்ள மக்கள் பலர் என்றாலும் அவரைப் பலவிதமாகப் பெயரிட்டு வழங்குகின்றோம். செட்டிநாட்டில் முதல் எழுத்துகளைக் கொண்டு வழங்கும் முறை பெருவழக்காக இருந்து வருகின்றது. முத்தையனை மு. (மூனா) என்றும் தியாகராசனை தி (தீனா) என்றும் சொக்கலிங்கத்தைச் சொ (சோனா) என்றும் வழங்குவதைக் காணலாம். முதல் எழுத்தில் இரண்டு மூன்று பெயர்கள் தொடங்கினால் அவற்றை வேறுபடுத்தி அறிவதற்கு முதல் இரண்டு எழுத்துகளைச் சேர்த்து எழுதுவர். முருகப்பனை முரு (மூனா ருனா என்றும், திருநாவுக்கரசை திரு (தீனா ரூனா) என்றும் வழங்குவர். இது போன்ற ஒரு முறைதான் அணுக்களுக்குப் பெயரிடுவதிலும் மேற்கொள்ளப் பெறுகின்றது. கார்பனை (கரி) C என்றும் நைட்டிரஜனை 'N' என்றும் எழுதுவர். ஆனால் கால்சியத்தையும் நிக்கலையும் முறையே Ca என்றும் N: என்றும் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்தே எழுதுவர்.