பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் - நோக்கில் 17 பண்டையோரின் வேதியல் அறிவு : ஆதியில் இயற்கையை ஆராயத் தொடங்கிய மனிதனுக்கு ஒர் உண்மை புலப்பட்டது. ஒன்றாய் இருந்த விதை பின் வேராய், அடிமரமாய், கிளையாய், கொம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாய் மாறுதல் போலவே வித்தென அருவமாய் இருந்தவை மரம் என உருமாறியது என்று அவன் நினைத்தான். இக் கொள்கைக்குப் பரிணாமவாதம் என்று பெயர் கூர்தல் அறம் (Treau ofEபolution) என்று அருந்தமிழில் வழங்குவர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர் சிலர், நீர் என்றனர் பிறர் தீ என்றனர் ஒரு சாரார். காற்று என்றனர் பிறிதொரு சாரார். வேறு சிலர் வான் என்றனர். இந்த வாக்குச் சண்டையில் கலந்து கொள்ள அஞ்சிச் சிலர், தென்காசி வழக்காக, ஐந்தும் அடிப்படை என்றனர். இத்தகைய கொள்கையை வற்புறுத்தியவர் அனிஸ்டாட்டில் என்பார். தொல்காப்பியரும், நீலந்தி நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்." என்று கூறினர். இதனையே கம்பநாடரும், விலங்கிய பூதம் ஐந்தும் விகாரப் பாட்டின் வேறுபாடுற்ற விக்கம்." என்று கூறுவர். அரிஸ்டாட்டிலின் கொள்கைப்படி நான்கோ ஐந்தோ தனிப்பொருள்கள் தனிமங்கள். மற்றவை யாவும் தனிமங்கள் பல வகையாகச் சேர்வதால் உண்டாகும் சேர்க்கைப் பொருள்கள். இப்படிக் கலப்பதைப் பஞ்சீகரணம் என்று வேதாந்தம் கூறும் அவ்வாறு கலக்கும் பொருள்களை அறிவியலார் தனிமங்கள் என்று பேசுவர். - தத்துவம் அறிவியலாதல் : பொருள்களை ஆக்கும் அடிப்படையான துகளே அனுவாகும். இந்த உலகமும் இதனையொத்த வேறு அண்டங்களும் அணுவினால் ஆகியவையே. பூக்கள் சேர்ந்து பூமாலையாதல் போல அணுக்கள் சேர்ந்து அண்டமாகின்றன. பழங்கால அணுவாதம் இதுதான். சமண மதம் பேசியது இந்த அணுக் கொள்கையையே. நியாயமதம், வைசேடிகமதம் என்ற தொல், பொருள். மரபி - 91 . 18. கம்பரா. சுந்தர. காண். காப்பு.