பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழில் அறிவியல் செல்வம் ஒரு கிராம் நீரை வெப்பமானியில் ஒரு சுழி (Degree) அளவு சூடேற்றினால் தேவையாகும் வெப்பத்தைக் கனலி (Colore) என்று குறிப்பிடுவர். 9 x 10’ என்று மேலேகண்ட ஆற்றல் இந்தக் கணக்கின்படி 2 X 10 கனலியாகின்றது. இதுவும் வெறும் எண்ணாகத்தானே காணப் படுகின்றது என்று நினைக்கலாம். 2500 டன் நிலக்கரியை எரித்தலால் எவ்வளவு வெப்பம் வெளியாகுமோ அந்த அளவு வெப்பம் ஒரு கிராம் நிலக்கரியை அணுச்சிதைவு செய்தால் கிடைக்கும் என்று ஒரளவு இதனை விளக்கி வைக்கலாம். ஒரு நியூட்ரான் ஒரு யு-235இன் கருவினைத் தாக்கும்போது அது அக்கருவினுள் புதைந்து அதனை நிலையற்றதாகச் செய்து விடுகின்றது. ஒரு கிண்ணத்தின் நிறையவுள்ள கோலிகளின் மீது வெளியிலிருந்து ஒரு கோலி தாக்கினால் கிண்ணத்திலுள்ள கோலிகளில் அசைவு உண்டாகி ஒரு சில வெளியேறுவது போன்ற நிகழ்ச்சிதான் இது. இங்கு யுரேனிய அணு இரண்டாகப் பிரிந்து விடுகின்றது: அக்கருவிலிருந்து மூன்று நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை அருகிலுள்ள வேறு யுரேனிய அணுக்களைச் சிதைத்து அவற்றைப் பக்குவிடச் செய்யலாம். இந்த மூன்று நியுட்ரான்கள் அருகிலுள்ள அணுக்களைத் தாக்கி ஒன்பது நியூட்ரான்களை வெளிப்படுத்தும் இவை அருகிலுள்ள ஒன்பது யுரேனிய அணுக்களைத் தாக்கி இருபத்தேழு நியூட்ரான்களை வெளிப்படுத்தும். எனவே, ஒரு நியூட்ரானைக் கொண்டு துவக்கப்படும் இவ்விளைவு தொடர்ந்து நிகழ்ந்து கோடிக்கணக்கான யுரேனிய அணுக்களைப் பிளந்து ஏராளமான ஆற்றலை வெளிப்படுத்தும் அணுகுண்டில் நிகழ்வது இதுதான். ஒரு நொடியில் பலகோடி அணுக்களைச் சிதைத்து பேராற்றலை விளைவித்து பேரிழப்பை பெரிய நாசத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்நிலை விளைவை அடியிற்கண்ட எடுத்துக்காட்டுகளால் விளக்கலாம்.