பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 29 உட்கருவிலே அடங்கிக் கிடக்கின்றது. ஓர் அணுவைத் துளைத்து அதன் உள்ளே பறந்து செல்லக் கூடுமானால் அவர் எலக்ட்ரானையோ உட்கருவின்ையோ அடிக்கடி சந்திக்க இயலாது. இதனால்தான் உட்கருவினைத் தாக்கிச் சிதைக்க முயலுங்கால் தாக்கச் செல்லும் பொருள்கள் அணுரவைகள் - கருவில் படாமல் ஒடிப் போகின்றன. தொடர்நிலை விளைவு (Chain reaction): யு-235 இன் கருவினை ஒரு நியூட்ரான்கொண்டு தாக்கினால் அஃது என்ன ஆகும்? அது சிதையும்; ஆற்றலும் வெளிப்படும். ஒர் உட்கரு சிதைவுற்றால் 200 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் வெளிவரும் அஃதாவது ஒர் எலக்ட்ரான் ஒருவேர்ல்ட்டு மின் அழுத்த வேற்றுமையில் செல்லுங்கால் பெறும் ஆற்றலின் அளவு. எவ்வளவு ஆற்றல் வெளிவரும் என்பதைக் கண்டறிய ஐன்ஸ்டின் கூறிய மந்திரம் பயன்படுகின்றது. அம்மந்திரம் E=mc. இந்தச் சமன்பாட்டின்படி ஆற்றலைப் பெற ஒரு மணித்துளியில் ஒருபிடி மண்ணை ஆற்றலாக மாற்றும் உலையை (Fயாace) அமைக்க முடிந்தால் அதிலிருந்து சுமார் பதினாயிரம் கோடி குதிரைத்திறன்” அளவுள்ள ஆற்றலைப் பெறலாம். இது தற்சமயம் நம் நாட்டில் எல்லா வழியிலும் பெறப்படும் மொத்த மின்சார ஆற்றலின் அளவைக்காட்டிலும் பதினாயிரம் மடங்கிற்கு மேல் அதிகம். ஆற்றலின் அளவு : ஐன்ஸ்டின் கணக்குப்படி ஒரு கிராம் பொருண்மையுள்ள யு-235-லிருந்து எவ்வளவு ஆற்றல் வருகின்றது என்பதைக் காண்போம். ஐன்ஸ்டினின் வாய்பாட்டின்படி E = (1x3 = 9 x 10 ஆகும். இதனை வெப்ப ஆற்றல் கண்க்கில் நன்கு தெளிவாக விளக்கலாம். 25. குதிரைத் திறன் - Horse power £psolo வாய்ந்த குதிரைகள் வேலை செய்யும் திறனின் சராசரியை அளவிட்டுக் கண்டது. 650 இராத்தல் உள்ள பொருளை ஒரு விநாடி நேரத்தில் ஓர் அடி உயரம் தக்கக் கூடிய திறன். இது 746 வாட்டுக்குச் (Watt) சமம். ஆகவே ஒரு கிலோ வாட் என்பது சுமார் 1/3 குதிரைத் திறன். - * .3