பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழில் அறிவியல் செல்வம் அடைதல் வேண்டும். வயிரத்தை வாள் கொண்டு அறுப்பது போலவே, அணுவும் அணுவின் பகுதியாகவுள்ள நியூட்ரான்களை எய்பொருளாக (அனுரவைகளாக)க் கொண்டு பிளக்கப் பெறுகின்றது. கர்ணனிடமிருந்த அரவக்கணை வில்லில் வைத்துப் பெருவேகத்துடன் எய்யப் பெற்றது போலவே இந்த அனுரவைகளும் சுழலினி (Cuclotron) போன்ற அணுச் சிதைக்கும் கருவிகளில் (Atom sாமshers) வைத்து அணு என்ற இலக்கை நோக்கி எய்யப் பெறுகின்றன. அணுவின் உள்ளமைப்பில் பெரும்பகுதி குடுக்கைபோல் வெற்றிடமாக உள்ளது பற்றி ஒரு விளக்கம். ஓர் அணுவின் அளவினைப் பெரிதாக்கி அதன் பரப்பை இருபது மீட்டர் விட்டமுள்ள வட்டத்தில் குறிப்பிட்டால், அப்பொழுது ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்கு ஒரு மையப் புள்ளியே அதன் உட்கருவினைக் குறிக்கும் இங்கு அணு முழுதும் ஒரு குடுக்கை போல் இருக்கும். மகிமா சித்தர் ஒருவர் ஒரு துளி நீரை உலகம் அளவு விம்மிப் பெரிதாகச் செய்யுமுடியுமானால், அதிலுள்ள ஒவ்வொரு அணுவும் ஒரு மீட்டர் குறுக்களவுடையதாக இருக்கும். அப்பொழுதும் கருவின் குறுக்களவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குதான் இருக்கும். அதே,சித்தர் ஒரு நீரிய அணுவினை 600 மைல் குறுக்களவுள்ள (300 மைல் ஆரையுள்ள) கோளம் போல் விம்மி உப்பச் செய்தால் அதன் நடுவில் உள்ள புரோட்டான் உரு பட்டாணி அளவு கிடக்கக் காணலாம். எலக்ட்ரானோ இதனினும் மிகப் பெரியதாய் 30 அடி குறுக்களவுள்ள பெரிய உருண்டையாய்க் கோளத்தின் விளிம்பில் கிடக்கும். எனவே, அணுமுழுவதும் பெரும்பாலும் காலியிடமே நிறைந்துள்ளது எல்லாம் வெட்டவெளியாய்க் கிடக்கின்றது. கதிரவனுக்கும் கோள்கட்கும் இடையில் வெட்டவெளி இருப்பது போலவே அணுவிலும் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையில் எல்லாம் வெட்டவெளியாகும். எடை முழுவதும் கதிரவனிடம் இருப்பது போலவே, அணுவிலும் எடை முழுவதும்