பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 27 இப்புதிய ஆற்றல் மெக்சிகோ பாலைவனத்தில், மணல் வெளியில், முதன்முதலாக வெளிப்படுத்தப் பெற்றது; மக்கள் அதன் அளவற்ற வன்மையை அறிந்தனர். 1945ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள்' இச் சோதனை நடைபெற்றது. பல டன் எடையுள்ளதும் ஆறரை படைசால் (Furtong) குறுக்களவுள்ளதுமான எஃகுக் கோபுரத்தின் மீது அணுகுண்டை வீழ்த்திய சரவ சம்ஹாரத்தின் ஒத்திகையை நடத்தினர் அமெரிக்கர், விளைவு என்ன? எஃகுக் கோபுரம் பொடிப் பொடியாய்ப் போய் காற்றில் பறந்து விட்டது. மணல் உருகிப் பெரிய கண்ணாடி ஊத்தப்பாக மாறிவிட்டது. அதே ஆண்டு ஆகஸ்டு 6ஆம் நாள் ஹிரோஷிமாவிலும், மூன்று நாட்கள் கழித்து நாகசாகியிலும் இந்த ஊழிக் கூத்து நட்ைபெற்றது. இந்த உலகத்தின் தலை எழுத்து அணுகுண்டில் அடங்கி யுள்ளது என்பதை நாம் இப்போது அறிகின்றோம். அண்மையில் நம் நாடுகூட அணுகுண்டு சோதனை நடத்தியதும் அதன் விளைவாக அமெரிக்க இந்தியாவுக்கு விளைவித்த பொருளாதாரத்தடையையும் அதனால் கிளம்பிய அரசியல் புழுதிகளையும் கண்டோம். அனுவைப் பிளத்தல் : அணுகுண்டில் பயன்படும் பொருள்கள் யு-235ம் புளுட்டோனியமும். முன்னது யு-238-லிருந்து பெருஞ்செலவில் தூய்மைப் படுத்தப் பெற்றது. பின்னது செயற்கை முறையில் தயாரானது. யு-233 போன்ற அணுவைப் பிளத்தல் எளிய செயலன்று. ஏனெனில் உட்கருவைப் பிணைத்துக் கொண்டிருக்கும் அற்புத விசை அளவற்றது; நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட வலிவுடையது. இதைத் தவிர, கருவினைச் சுற்றி சக்கர வியூகங்கள் போன்ற பாதுகாப்பு முறைகள் பல மடங்குகளில் (யுரேனிய அணுவில் ஏழு மண்டலங்களில்) அமைந்துள்ளன. யுரேனிய அணுவைப் பிளக்க வேண்டுமானால் இந்த ஏழு சக்கர வியூகங்களையும் கடந்து சென்று உட்கருவினை 24. அப்போது நான் துறையூரில் திருச்சி மாவட்டம் பணியாற்றிக் கொண்டிருந்த காலம் அணு பற்றி வரும் செய்திகளைப் பேரார்வத்துடன் படித்து வந்த காலம். :