பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழில் அறிவியல் செல்வம் அணுவாற்றலை வெளிப்படுத்தும் முயற்சியாகும். இதனை இரண்டு எடுத்துக்காட்டுகளால் விளக்கலாம். (1) இரண்டு தாள்களை ஒட்டுவதற்குத் திரவமாகக் கரைத்த கோந்து பயன்படுகின்றது. ஈரம் காய்ந்ததும் அவை வன்மையாக ஒட்டிக் கொள்ளுகின்றன. அந்த இரண்டு தாள்களை மீண்டும் பிரிக்க வேண்டுமாயின் அவற்றை நனைத்தாக வேண்டும். அஃதாவது ஆவி உருவத்தில் அவற்றினின்றும் அகன்ற நீரை மீண்டும் அத்தாள்கட்கு அளித்தாக வேண்டும். அவற்றை நனைப்பதற்கு வேண்டிய மிகக் குறைந்த அளவு நீரே அவ்விரண்டு தாள்களையும் ஒட்டுவதற்குப் பயன்பட்ட ஆற்றல் என்று உத்தேசமாகக் கூறலாம். இந்த அளவு நீர்தான் கோந்து தாள்களை ஒட்டினபோது ஆவியாக மாறிற்று. (2) கந்துக் கடைக் கந்தசாமி செட்டியார் நகையை அடமானமாக வாங்கிடக் கொண்டு கடனாகப் பணம் தருகின்றார். செட்டியாரையும் நகையையும் பிரிக்க வேண்டுமானால் கடனாக வாங்கிய தொகை முழுவதையும்: திரும்பக் கொடுத்துவிட் வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அவர் கொடுத்த தொகை அஃதாவது அவர்தம் கையைவிட்டுச் சென்ற தொகை பெரிதாக இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அவர்தம் கைக்கு வந்து சேர்ந்த தொகையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார். இங்கே செட்டியாரையும் நகையையும் பிணைத்த ஆற்றல் பனம். - - இங்ஙனமே அணுவின் உட்கருவில் துணுக்குகளைப் பிணைத்த ஆற்றல்தான் அணுகுண்டின் திருவிளையாடலில் பங்கு கொண்டது. இந்த ஆற்றல் அணுவின் உள்ளிருந்து, அஃதாவது உட்கருவிலிருந்து, வெளிப்படுகின்றது. இந்த ஆற்றலை உட்கரு ஆற்றல் (Nuclear energழ என்று வழங்குவதான் பொருத்தம். முதலில் மக்கள் அதனை 3 goals, shpsi (Atomic energy) orai sã ža, psi 4. வழங்கிவிட்டனர். அப்பெயரே வழக்கத்திலும் வந்து விட்டது.