பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 39 பல்வேறு விதங்களில் கெடும். இதில் அயோடின் என்ற வேதியியற் பொருள் உள்ளது. இதன் சமனிலை பாதிக்கும்பொழுது கோளாறுகள் ஏற்படும். இந்தச் சீர்கேடான நிலையைச் சரிப்படுத்த அயோடின்-131 தரப்பெறுகின்றது. அஃது ஊசிமூலம் உடலில் குத்திப்புகுத்தப் பெறுகின்றது. உடலினுள்ளே சென்ற அயோடின் ஐசோடோப்புகள் காக்கைக் கூட்டில் வாழும் குயில்குஞ்சுகளைப் போல் புரிசைச் சுரப்பில் செறிந்து திரளுகின்றன. அவை வீசும் பீட்டா கதிர்கள் புரிசைச் சுரப்பியில் உள்ள சில இழையங்களை அழிக்கின்றன. மட்டுக்கு மீறி சுறுசுறுப்பாக இயங்கும் (ஹைப்பர் தைராடிசம்) புரிசைச் சுரப்பி சாதாரண நிலைக்கு வந்துவிடுகின்றது. கதிரியக்க அயோடின் வீசும்கதிர்கள் சில இழையங்களை அழித்து இந்நிலைக்கு வரச் செய்கின்றன. தம்வேலை முடிந்ததும், கதிர்களும் நின்று போகின்றன. கதிரியக்க அயோடினும் பல்லைப்பிடுங்கின பாம்பைப்போல் தீங்கு செய்ய இயலாத நிலையை அடைந்து விடுகின்றது. பிணி நீங்கின நோயாளியும் உடல் நலத்துடன் என்றும் போலவே வாழ்ந்து வருகின்றான். இன்று கதிரியக்க அயோடின் வாய்வழியாகப் பானமாகவும் தரப்பெறுகின்றது. (3) பாலிசைத்தீமியா (Polgaபுtemia : குருதியில் ஒரு கனமில்லி மீட்டருக்கு ஐம்பது இலட்சம் வீதம் இருக்க வேண்டிய சிவப்பு அணுக்களுக்கு மேல் (Red corpuscles) மிகுதியாக இவ்வணுக்கள் பெருகுவதால் இந்நோய் தோன்றுகின்றது. உடலில் சிவப்பு அணுக்கள் அதிகமாக இயற்றப் பெறுவதைத் தடுப்பதற்குப் பாஸ்வரம் - 32 பயன்படுத்தப் பெறுகின்றது. நாம் உண்ணும் உணவிலுள்ள பாஸ்வரம் உடலில் குருதியை இயற்றும் பகுதிகளுக்கு அஃதாவது எலும்புமச்சை Bone marrow) was roofaai (Spleen), fiassifiñā ārū’īāsā (Lymphatic glands ஆகியவற்றிற்கு - நேரே செல்லுகின்றது. கதிரியக்கப் பாஸ்வரமும் (ஐசோடோப்பு) இப்பகுதிகளையே நாடிச்