பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. தமிழில் அறிவியல் செல்வம் செல்லுகின்றது. அவை அங்குள்ள குருதிச் சிவப்பு அணுக்களைச் சரமாரியாகத் தாக்கிச் சிதைக்கின்றன. இதனால் குருதியிலுள்ள சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து மெதுவாக சீரான விகிதத்திற்கு வந்து விடுகின்றது. இதனால் நோயாளியின் உடல் நலமும் சீராகின்றது. குருதியில் ஏற்படும் வேறு கோளாறுகளும் இதனால் குணமடைகின்றன. (4) லூக்கிமியா (Leukemia): இது பாலிசைமீயாவை விட மிகவும் கொடுமையானது. குருதியில் மட்டுக்கு மீறிய வெள்ளையணுக்கள் (Whitecorpuscles) உண்டானால் இந்நோய் தலைகாட்டுகின்றது. இந்நோய் ஏற்படுதற்குக் காரணம் தெரியவில்லை. தக்க முறையில் சிகிச்சை செய்து கொண்டே வந்தால் நோயாளிகள் பல ஆண்டுகள் செளகர்யமாக வாழலாம். ஆயினும், இந்நோய் இறப்பில்தான் கொண்டு செலுத்தும். o (5) அழுகு புண் : அழுகு புண் என்பது அறுவை சிகிச்சை மருத்துவம் அடிக்கடிக் கானும் ஒரு நோய். இந்நோய் குருதியோட்டக் குறைவினால் ஏற்படலாம், இஃது ஏற்படக் பிறகாரணங்களும் உள. இப்புண் ஏற்பட்டால் அழுகிப் போனபகுதியை உடலிலிருந்து வெட்டி எறிவது அவசியம். ஆனால், மிகச் சிறந்த அறுவை மருத்துவர்கூட எந்த இடத்தில் வெட்டுவது என்பதை மிகத் துல்லியமாக அறுதியிடுவது எளிதன்று. இதனை அறுதியிடுவதற்கு கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. சோற்றுப்பிலுள்ள சோடியத்தைக் கதிரியக்கமுடையதாகச் செய்து இதற்குப் பயன்படுத்துகின்றனர். இச்சோடியம் பெற்ற கிளர்ச்சி சிலமணி நேரம் நீடித்திருக்கும். இந்தக் கதிரியக்க உப்பில் ஒருசிறு பகுதியை சோற்றுப்புடன் கலந்து உணவுடன் உண்டால் சாதாரண உப்புடன் கதிரியக்க உப்பு சென்று குருதியில் கலந்து விடும். உடலில் குருதி ஓடிவரும் இடம் எங்கும் இந்த உப்பும் ஊடவே செல்லும். அங்கெல்லாம் இதன் அணுக்கள் வெடித்து காமா கதிர்களை வீசும்.