பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 47 செய்வதில்லை; அவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அவற்றிடம் அமைந்துள்ளது. களைகளைக் கொல்லும் திறனும் வேதியற்பொருள்களிடம் ஒரளவுதான் அமைந்துள்ளது. பூச்சிகளைக் கொல்லும் மருந்துக் கலப்பின் வேதியியல் அமைப்பில் கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி அம்மருந்துகளின் அடிப்படைச் செயலையும் அவற்றின் நன்மைகளையும் பயன்படும் .பலைகளையும் பற்றிய தெளிவான அறிவை ஆய்வாளர்கள் பெறுகின்றனர். (ஆ) களைகளை அழிக்கும் மருந்துகள் யாவும் வேதியியற் பொருள்களே. அவை குறுகிய இலைகளையுடைய புற்களுக்குத் தீங்கு பயக்காமல் அகன்ற இலைகளையுடைய களை களை மட்டிலும் அழிக்கின்றன. கதிரியக்க ஐசோடோப்பு ஆராய்சியால் இதற்குக் காரணம் கண்டறியப் பெற்றுள்ளது. (இ) கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்திப் புழுக்கள், வண்டுகள், அந்துப் பூச்சிகள் முதலிய பூச்சிப் பீடைகளின் வாழ்க்கை இயல்புகள் ஆராய்ந்து அறியப் பெற்று வருகின்றன. இதனால் புதிய பூச்சிக் கொல்லிகளைக் கண்டறியவும், உடனே அவற்றை அழிக்கும் மருந்துகளைக் காணவும் இவ்வறிவு வழிகாட்டுகின்றது. (ஈ உழவர்கட்குப் பலவிதங்களில் உறுதுணையாக இருப்பவை கால்நஇடப் பண்ணை, கோழிப்பண்ணை முதலியன. பிராணிகளின்மீது கதிரியக்கக் ஐசோடோப்புகளைப் பயன்படுத்திச் செய்யப் பெறும் சில சோதனைகள் உணவு உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. c - (உ) பன்றிகளையும் கோழிகளையும் கொழுக்க வைக்கும் புதிய மருந்து கண்டறியப் பெற்றுள்ளது. இந்த மருந்தினை உண்ட பற்றிகளின் புரிசைச் சுரப்பிகள் மந்தமடைந்து குறைந்த வேகத்துடன் இயங்குகின்றன். இதனால் பன்றிகள் வழக்கமாக உண்ணும் உணவையே உண்டபோதிலும் விரைப்பாகவும் கொழுப்பாகவும் வளர்கின்றன. இந்த மருந்தினை உண்ட