பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - தமிழில் அறிவியல் செல்வம் பன்றிகளின் இறைச்சியிலும் கோழிகளின் முட்டையிலும் இந்த மருந்து இல்லையென்று சோதனைகள் மூலம் உறுதிப்பட்டது. ஆகவே, பண்ணையாளர்கள் இம்மருந்தினைப் பயன்படுத்திப் பன்றிகளையும் கோழிகளையும் கொழுக்க வைக்கின்றனர். (ஊ) இங்ஙனமே பசுக்களின் புரிசைச் சுரப்பிகளை மந்தமாக இயங்கச் செய்வதற்கு மற்றொரு வகை மருந்தினைக் கண்டறிந்துள்ளனர். இதனை உண்ட பசுக்கள் மந்தமான இயல்பை அடைகின்றன; வேறுவழிகளில் செலவழியும் அதன் ஆற்றல் அதிக அளவு பாலை உண்டாக்குவதில் பயன்படுகின்றது. . . (எ) கால்நடைப் பண்ணைகளில் தோன்றும் சில பீடைகளை ஒழிப்பதற்கும் கதிரிய ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. ஆடு மாடுகளின் மேல் தோலிலுள்ள கீறல்களிலும் இடுக்குகளிலும் திருகு ஈக்களின் பெண்ணினங்கள் முட்டையிடுகின்றன. முட்டை களிலிருந்து வெளிப்படும். நெளி புழுக்கள் அப்பிராணிகளின் சதையைத் தின்று கொடிய புண்களை உண்டாக்குகின்றன. இவற்றால் அப்பிராணிகள் இறந்து விடுதலும் உண்டு கோபால்டு கதிர்களைக் கொண்டு திருகு புழுக்களில் ஆண் இனங்களை மலடாகச் செய்து விடலாம். (ஏ) கால்நடைகளிடம் சோகை (Andemia)போன்ற ஒரு நோய் அவை மேயும் வயல்களின் மண்ணில் உள்ள ஏதோ ஒரு வேதியியற் பொருளில் அதிகமாகி வந்தது என்பது அறிவியலறிஞர்கட்கு உறுதிப்பட்டது. அங்குள்ள வேதியியற் பொருள் ஒவ்வொன்றையும் கொண்டு சோதனைகள் நடத்தினர். அவை செல்லும் வழிகளைக் கதிரியக்க ஐசோடோப்புகளால் துலக்கிக் கண்டனர். மண்ணில் உள்ள கோபால்டு கால்நடைகள் தின்னும் புல்லின் வழியாக அவற்றினுட் சென்று இந்த நோயை விளைவித்தது என்பதை அறிந்தனர். அந்த வேதியியற் பொருளால் கால்நடையை எவ்வாறு தாக்கி நோயுறச் செய்தது என்பதை அவர்கள்