பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 49 விளங்கிக் கொண்டபின்னர். இதன் பயனாக அந்நோய் தோன்றாமல் இருக்க ஒருநடைமுறையையும், ஒரு சிகிச்சை முறையையும் கண்டனர். (ஐ) நுண்சத்துப் பொருள்கள் (Micro - nutrients) என்பவை தாவரங்களுக்கும் பிராணிகட்கும் ஊட்டம் அளிக்கும் தனிமங்கள். அவற்றின் வளர்ச்சிக்கு இவைமிகச் சிறிய அளவுகளில் (இலவலேச) தேவைப்படுகின்றன. இலவலேசத் தனிமங்களாக அயம், தாமிரம், மாங்கனீஸ், போரன், மாலிப்டினம், கோபால்டு, அயோடின், துத்தநாகம் ஆகியவை இனம் கண்டறியப் பெற்றுள்ளன. சில தாவரங்களைக் கட்டுப்படுத்திய சோதனைக் குள்ளாக்கி இந்த உண்மைகளை அறிந்துள்ளனர். எ.டு. சீமைத்தக்காளிச் செடிகளுக்கு துத்தநாகம் தேவைதானா என்று அறிவியல் அறிஞர்களும் காய்கறித் தோட்டக் காரர்களும் அறிய விழைந்தனர். பல்வேறு சோதனைகட்குப் பிறகு சுமாரான அளவு துத்தநாகம் தேவை என்பதை அறுதியிட்டனர். 岑 (4) தொழில் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகள் தொழில் துறையிலும் பெரிதும் பயன்படுகின்றன. உயிரியல் துறையை நோக்க இத்துறையில் அவை அதிகமாகப் பயன்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு வழி - துலக்கி முறைதான் பேரளவில் பயன்பட்டு வருகின்றது. கதிரியக்க ஐசோடோப்புகள் தொழில் துறையில் பயன்படுவதை அளவிடுதல், அடையாளம் இடுதல், தேய்மானத்தைக் காணல் என்ற மூன்று வகைகளில் அடக்கிக் கூறலாம். - A அளவிடுதல் கதிரியக்கப் பொருள்களிலிருந்து வெளிப்படும் கதிர்க் கற்றையின் தீவிரத்தில் நேரிடும் மாற்றத்தைக் கணக்கிட்டே அளவிடுதல் செயல்கள் மேற்கொள்ளப் பெறுகின்றன. கதிரியக்கப் பொருள் கதிரியக்கத்தை விளைவிக்கும் மூலமாகப் பயன்படுத்தப் பெறுகின்றனவேயன்றி பொருள்