பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழில் அறிவியல் செல்வம் உற்பத்திச் செயலிலோ, அதை உற்பத்திப் பொருள்களிலோ அவை சேர்க்கப் பெறுவதில்லை. . - (i) கனத்தை அளக்கும் கருவிகள் : கனத்தை அளக்கும் கதிரியக்கமுள்ள கருவி நடைமுறைச் செயல்களைக் கண்டறியும் கருவிகளில் தலை சிறந்தது. தொழிற்காலைகளில் உற்பத்தி செய்யப் பெறும் தகடுவடிவத்திலுள்ள பல்வேறு பொருள்களின் கனத்தைக் கண்டறிவதற்கு இக்கருவி பயன்படுத்தப் பெறுகின்றது. - இவ்வாறு அளவிடப் பெறும் பொருள்களில் கார்பன்தாள், மெழுகுத் தாள், பொருள்களை மூடுவதற்குப் பயன்படுத்தும் தாள் போன்றவைகளும்; அலுமினியத் தகடு, தாமிரத்தகடு, எஃகுத் தகடு போன்ற தகடு வகைகளும்; பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் ரப்பர்ப் பொருள்கள், கூரை வேய்வதற்கும், தரையில் பரப்புவதற்கும் பயன்படும் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், கயிறு இழைகள், ஒளிப்பட பிலிம்கள், பூச்சுப் பூசிய வேறுதகடு வகைகள் ஆகிய பொருள்களும் அடங்கும். - * - கனத்தை அளக்கும் கருவிகளில் வெவ்வேறு இரண்டு வகைக் கருவிகள் செய்யப் பெற்றுள்ளன. . (அ) முதல் வகை : உறிஞ்சும் கன அனவுக் கருவி என்பது. இதில் அளக்கப் பெறவேண்டிய பொருள் கதிரியக்க மூலத்திற்கும் அளவிடும் சாதனத்திற்கும் இடையில் செல்லும், கதிர்வீச்சு பொருளை ஊடுருவிச் செல்லும் பொழுது அதன் தீவிரத்தில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் பெறுகின்றது. ஊடுருவிச் செல்லும் கதிர் வீச்சின் அளவு பொருளின் கனத்திற்குத் தலைகீழ் விகிதப் -- பொருத்தத்தில் (interse proportion) அஃதாவது பொருளின் கனத்திற்கேற்றவாறு கதிர் வீச்சின் அளவு குறையும். (ஆ) இரண்டாவது வகை : பின்னோக்கிச் சிதறும் கனம் அளக்கும்.கருவி என்பது. இதில் கதிர் வீச்சின் மூலம் அயனியாக்கும் அறையும் ஒரே பக்கத்தில் அமைக்கப்