பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் அறிவியலுக்கு வளமான கொடை பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம் 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாரதியார் தமிழர்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தலைமேற்கொண்டு உலகில் எத்திசையில் அறிவு இருந்தாலும் அவற்றைத் தமிழில் வழங்கத் தமிழறிஞர்கள் தலைப்பட்டனர். பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்னும் பாரதியார் வாக்கினைச் செயல்படுத்தி உலகின் சிறந்த இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தனர். தமிழாக்கம் செய்தனர். தமிழ் ஆக்கம் பெற்றது. மானுடவியல் சார்ந்த சிறுகதை, நாவல். கட்டுரை மொழிபெயர்க்கப்பெற்ற அளவிற்கு அறிவியல் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பெறவில்லை. தமிழில் வெளிவரும் நூல்களில் அறிவியல் நூல்கள் 1 சதவீதம் தான் என்பது அண்மையில் நடந்த ஆய்வில் வெளிப்பட்ட செய்தி. ஆயிரம் நூல்களில் பத்து அறிவியல் நூலாக இருந்தாலும் அதில் மிகச் சிறந்தவை எனப் போற்றத்தக்கது 5 தான் என்று அவ் ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.