பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 55 பொறியை நிறுத்தி விடவும் செய்யலாம் (எ.டு.) ஒரு துளையிடும் இயந்திரத்தை இயக்குபவர் சரியான காலத்திற்குள் தம் கைகளை வெளியே எடுக்கத் தவறினால் கையிலுள்ள மணிக்கட்டுப் பட்டியிலிருந்து வெளிப்படு கதிர்கள் சில கருவிகளை இயக்கி இயந்திரத்தை நிறுத்தி விடும். f (C) தேய்மானச் சோதனைகள் தேய்மானச் சோதனைகளிலும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. இவை அன்றாட நடைமுறைச் செயல்களில் பயன்படாவிட்டலும், உற்பத்தியாளர்கட்கு மிகவும் இன்றியமையாதவைகளாக உள்ளன. கதிரியக்க ஐசோடோப்புகள் மிக நுட்பமானவையாதலின், அவற்றைக் கொண்டு தேய்மானத்தை அளக்கும் முறை ஏனைய முறைகளை விடச் சிறந்தவை; அன்றியும், சரியாகவும் குறுகியகாலத்திற்குள்ளும் அளப்பதற்கு ஏற்றவை. () டிசெல் எண்ணெய்ப் பொறிகளிலும், காஸோலின் எண்ணெய்ப் பொறிகளிலும் உள்ள ஊடியங்களிலுள்ள வளையங்களின் தேய்மானத்தைக் கான கதிரியக்க ஐசோடோப்புகள் அதிகமாகப் பயன்படுகின்றன. சோதனை செய்ய வேண்டிய பொறியின் பகுதியை அணுஉலையில் வைத்து கதிரியக்கமுடையதாகச் செய்வர். பிறகு அதனை அதற்குரிய பொறியல் பொருத்திப் பொறியினை இயங்கும்படிச் செய்வர். பொறிஇயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே அடிக்கடி வழுக்கிடு பொருளைச் சிறிது சிறிதாக எடுத்துச் சேர்த்து அதிலுள்ள கதிரியக்க அளவு அறுதியிடப் பெறும் இதிலிருந்து தேய்மானத்தின் அளவும் தீர்மானிக்கப் பெறும். - . . . (ii) ஐசோடோப்பு யுக்தி முறை தானோடித் தொழிற்சாலைகளிலும் வேறு தொழிற்சாலைகளிலும் தளவாடங்களின் (Gear) தேய்மானத்தை அளப்பதிலும், டயர் பட்டன் களின் தேய்மானத்தை அளப்பதிலும் பயன்டுத்தப் பெறுகின்றது. -