பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழில் அறிவியல் செல்வம் (tti) சில கம்பெனிகள் இயந்திரங்கள்ை வெட்டும் கருவிகளின் ஆயுட்காலத்தையும் அவற்றின் தேய்மானத்தையும் அளப்பதற்கும் இந்த யுக்தி முறையைக் கையாளுகின்றனர். {{U} அரிப்பினால் (Corrosion) ஏற்படும் தேய்மானத்தை அறுதியிடுவதிலும் இம்முறை மேற்கோள்ளப் பெறுகின்றது. 3. விண்வெளிப் பயணம் பல்லாண்டுகளாக மேற்கொள்ளப் பெறற முயற்சிகள் அண்மைக் காலத்தில் பழமாயிற்று. தொடக்கத்திலிருந்து இன்றுவரை இத்திசையில் மனிதன் மேற்கொண்ட முயற்சிகளையும் அவன் அடைந்த வெற்றிகளையும் எண்ணியுரைக்கின் பாரதமாக விரியும் இவற்றைப் பற்றி எனது மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. அவை (1) அம்புலிப் பயணம் (2) தொலைஉலகச் செலவு, (3) விண்வெளிப்பயணம் என்பவையாகும்" இவற்றையெல்லாம் இரத்தினச் சுருக்கமாக இப்பொழிவில் காட்டமுயல்வேன். - மனிதனிடம் இயல்பாக அமைந்திருக்கும் இடம் பெயர் ஊக்கமும் (Migratorgistrict). விடுப்பூக்கமும்தான் இத்தகைய முயற்சிகளுக்குத் தூண்டல்களாக அமைந்திருக்க வேண்டும். இந்த இயல்பூக்கங்கள் செயற்படத் தொடங்கின துடிப்பைப் பல நாடுகளில் வழங்கி வரும் கற்பனைக் கதைகளினின்றும் பிற நூல்களிலிருந்தும் ஒருவாறு அறியலாம். விண்வெளிப் பயணம் பற்றி அறிவதற்கு முன்னர் சில அடிப்படைச் செய்திகளை உள்ளத்தில் கொள்ள வேண்டும். (, நமது அண்டை உலகுகள் : வானவெளியில் கணக்கற்ற உலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கையை மணிவாசகப் பெருமான், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன்' என்று கூறுவார். மாபெருங் கவிஞர் பாரதியாரோ 30. சைவ சித்தாந்த நூற்பதிப்புக கழகததில கடைககும. 3. திருவா. திருவண்டப்பகுதி அடி 4,