பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தமிழில் அறிவியல் செல்வம் இக்காற்று மண்டலத்தைப் பற்றி நாம் ஓரளவு அறிவோம். விண்வெளிப் பயணிகள் இதைப் பற்றி இன்னும் நன்றாக, தெளிவாக, விரிவாக அறிய வேண்டுவது மிகவும் இனறியமையாதது. இக்காற்று மண்டலம் 320 கி.மீ. உயரம் வரை பரவியுள்ளது. இது தரைமட்டத்தில் அடர்த்தியாகவும், மேலே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்தும் காணப்பெறுகின்றது. காற்று மண்டலத்தின் பெரும்பகுதி (99 விழுக்காடு) 32 கி.மீ. உயரத்திற்குள்ளாகவே அமைந்து கிடக்கின்றது. நாம் காற்று மண்டலத்தின் அடி மண்டலத்தில் வாழ்கின்றோம். அமைப்பு : காற்று மண்டலத்தை அறிவியலறிஞர்கள் ஐந்து அடுக்குகளாகப் பிரித்து அவற்றுக்குத் தனித்தனிப் பெயரிட்டு வழங்குகின்றனர். முதலாவது அடிவளி மண்டலம் (Troposphere : இது பூமியை ஒட்டியிருக்கும் அடுக்கு இப்பகுதி சற்றேறக் குறைய 15 கி.மீ. உயரம் வரை உள்ளது. காற்றின் ஐந்தில் நான்கு பகுதி இந்த அடுக்கில் அடங்கும். - இப்பகுதியில் அமைதியற்ற கொந்தளிப்புள்ளது. இங்குத்தான் மேகங்கள் உண்டாகின்றன; காலநிலை உற்பத்தியாகின்றது. சுழல் காற்றுகள், புயல்கள், சூறாவளிகள், பருவக்காற்றுகள் முதலியவை உருவாகும் இடம் இதுதான். விண்கற்கள் இப்பகுதியினுள் பாய்ந்து வரும்போது உராய்வினால் தரையில் வீழ்வதற்கு முன் எரிந்து போய்விடுகின்றன; மிகச் சிறிய அளவிலேயே பூமியை அடைகின்றன. - . இரண்டாவது அடுக்கு வளி மண்டலம் (Stratosphere) முதல் அடுக்கிற்கு அடுத்து உள்ள பகுதி இது அடி வளிமண்டலத்தின் உச்சியிலிருந்து 15 கி.மீ.க்கு மேல் தொடங்கி சுமார் 30 கிமீ உயரம் வரையில் பரவியிருப்பது. இப்பகுதியில் தொடர்ந்தாற்போல் கடுங்காற்று வீசிய வண்ணம் உள்ளது. இப்பகுதியின் அடிமட்டத்தில்