பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 61 வேகமாகப் பாய்ந்து செல்லும் இரண்டுகாற்றாறுகள் இப்பூமண்டலத்தைச் சுற்றி ஒடிக் கொண்டுள்ளன. (அ) ஒர் ஆறு வடதுருவப் பகுதிக்கும் பூமியின் நடுக்கோட்டிற்கும் இடையே மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து செல்லுகின்றது. -- - (ஆ) மற்றோர் ஆறு தென்துருவப் பகுதிக்கும் பூமியின் நடுக்கோட்டிற்கும் இடையே கீழ்த் திசையினின்றும் மேற்றிசையை நோக்கிப் பாய்ந்து செல்லுகின்றது. இவற்றின் இருப்புகளும் வேகமும் நாடோறும் மாறிக் கொண்டேயுள்ளன. சில சமயம் அவற்றின் நேர் வேகம் (Velociபூ) மணிக்கு 800 கி.மீ. வரை எட்டுகின்றது. இவற்றின் இருப்பு இரண்டாம் உலகப் பெரும்போர் நடைபெற்ற காலத்தில் கண்டறிப் பெற்றது. அமெரிக்க அறிவியலறிஞர்கள் தம்முடைய குண்டுவீசும் B-29 விமானங்கள் அடுக்கு வளிமண்டலத்துள், செலுத்திப் போரிட்டபொழுது இம்மண்டலங்களின் இருப்பினைக் கண்டனர். இங்கு வெப்பநிலை உறைபனிக்குக் கீழ் 80° F வரை இறங்குகின்றது. மூன்றாவது : இந்த அடக்கு வேதியியல் வளிமண்டலம் என்ற பெயருடையது. இது அடுக்கு வளிமண்டலத்திலிருந்து சுமார் 48கியமீ. உயரம் வரை பரவியுள்ளது. இதன் ஒரு பகுதி அடுக்கு வளிமண்டலத்தின்மீது மடிந்துகிடக்கின்றது (Oue laps). ஒஸோன் என்ற உயிர்க்காற்று பரவியுள்ளது. ஆகவே, இம்மண்டலம் ஓஸோன் மண்டலம் (Ozonbsphere) என்றும் வழங்கப் பெறுகின்றது." கதிரவன் காலும் புறஊதாக் கதிர்களும் உயிரியமும் சேர்ந்து மாற்றம் அடைந்து ஓஸோன் அடுக்கு ஏற்படுகின்றது. இந்த அடக்குதான் புற ஊதாக் கதிர்கள் புவியின்மீது விழாதவாறு பாதுகாக்கின்றது. 34. இப்புவியிலுள்ளேர் சுற்று வெளிப் பாதுகாப்பில் கவனமின்றி இருத்தலால் இம்மண்டலத்தில் ஒரு பெரிய துளை ஏற்பட்டிருப்பதாகவும், அது மிகவும் விரிவடைந்தால் இப்பூவுலகிற்குப் பெருங்கேடு விளையும் என்றும் அறிவியல்றிஞர்கள் கருதுகின்றனர்.