பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தமிழில் அறிவியல் செல்வம் இந்த அடுக்கின் வெப்பநிலை உறைபனி நிலைக்கு மேல் 80° F வரை உயர்கின்றது. ஓஸோன் புறஊதாக் கதிர்களை உறிஞ்சுவதால்தான் இந்நிலை ஏற்படுகின்றதாகக் கருதுகின்றனர் அறிவியலறிஞர்கள். அதன் பிறகு வெப்பநிலை கீழே இறங்குகின்றது. இந்த வளிமண்டல அடுக்கினால்தான் நம் உடலுக்குப் பல்வேறு கேடுகள் நேரிடக் கூடும் என்று கருதுகின்றனர். நான்காவது : வேதியியல் மண்டலத்திற்குமேல் உள்ள அடுக்கு அயனி மண்டலம் (oriosphere) என்பது. இது வேதியியல் மண்டலத்திற்குமேல் எவ்வளவு உயரம் பரவியுள்ளது என்பதை இன்னும் அறுதியிடவில்லை. இந்த அயனி மண்டலத்தில்தான் வடதுருவ விண்ணொளிகள் (Northern ights திடீரென்று பேரொளியுடனும் மினுக்கு மினுக்கு என அதிரும் ஒளியுடனும் காணப்பெறுகின்றது. இவை கண்களுக்கினிய வனப்புடைய காட்சிகளாயிருப்பினும் அவை சுறுசுறுபபாக இயங்கும்பொழுது நாம் வானொலி நிகழ்ச்சிகளை அநுபவிப்பதைக் கெடுக்கின்றன. இப்பகுதியில்தான் வானொலிப் பொறிஞர்கள் சிறப்பாகக் கவனம் செலுத்துகின்றனர். - ஐந்தாவது : அயனி மண்டலத்திற்கு மேலுள்ள பகுதி புறவளி மண்டலம் இமsphere) என்பது. இங்கு காற்றின் மூலக்கூறுகள் Molecules) அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். படிப்படியாக இம்மண்டலம் எல்லையற்ற விசும்பு வெளியுடன் கலக்கின்றது. இந்த விண்வெளி வெற்றிடமே என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். இன்னும் இம்மண்டலத்தைப்பற்றி அதிகமாக ஒன்றும் அறியக் கூடவில்லை. 300 கிமீக்கு மேல் மூச்சு விடுவதற்குக் கடினமாக உள்ளது. 600 கி.மீ.க்கு மேல் செல்வோர் உயிரியம் கொண்ட அமைப்புகளைக் கொண்டு செல்ல வேண்டும். துணைக்கோள் செல்வதற்கு உயிரியம் தேவைப்படாததால் அது காற்றே இல்லாத விண்வெளியில் செல்லுகின்றது.