பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 65 (ஆ) விண்கற்கள் : இவற்றால் விண்கலம் தாக்கப் பெற்று விபத்து நேரிடாமல் இருப்பதற்கு விண்கலத்தைப் பல அடுக்குத் தகடுகளால் உருவாக்கப் பெறுதல் ஒருமுறை. வேறு முறைகளும் உள்ளன. - (இ) அண்டக் கதிர்கள் : அண்டக் கதிர்கள் (Cosmic rags) சிறிது நேரம் விண்வெளி வீரர்களையோ அவர்கள் செல்லும் கூண்டினைய்ோ தாக்கினால் அதனால் யாதொரு கேடும் விளையாது என்று கருதுகின்றனர் அறிவியலறிஞர்கள். (ஈ) வேறு நெருக்கடிகள் : (1) மின்சார அமைப்பில் நேரிடும் கோளாறு (2) தீவிபத்து, (3) திடீரென்று அறைகளில் அழுத்தம் குறைதல் (4) விசைக் கருவிகளிலும் சுக்கானிலும் (Hull ஏற்படும் கோளாறுகள். இவற்றைச் சமாளிக்க வழி வகைகள் செய்யப் பெற்றுள்ளன. 5. அம்புலிப் பயண முயற்சிகள்: அம்புலி பூமியின் அருகிலிருப்பதால் இதனைத் தேர்ந்தெடுத்தனர். பூமியை ஒன்பது தடவை ஒருவிமானத்தில் சுற்றினால் எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமோ அதே தொலைவுதான் பூமியினின்று திங்களுக்குச் செல்லும் தூரமும் இருக்கும். - - அமெரிக்கர்கள் மூன்று திட்ட முயற்சிகளை மேற்கொண்டனர் - (அ) மெர்க்குரித் திட்ட்ம் ஒருகூண்டில் மனிதனை ஏற்றி அக்கூண்டினை விண்வெளிக்கு அனுப்பி அதனைப் பூமியைப் பலமுறை சுற்றிவரச் செய்து அதன் பின்னர் அதனைப் பூமிக்கு மீட்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். நான்குமுறை, நான்கு கூண்டுகளில் நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பி இத்திட்டம் வெற்றி கண்டது அமெரிக்கா" இத்திட்டம் 1963இல் நிறைவு பெற்றது. இரஷ்யாவிலும் விண்வெளிச் செலவு மிகச் சுறுசுறுப்பாக நடைபெற்றது" - - 36. பிட் 1962 மே 1962, அக் 1962 மே 1963. 3 ஏப் 1961 ஆக 1961 ஆக 1962 ஜூன் 1963.