பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழில் அறிவியல் செல்வம் இங்கனம் இருநாடுகளும் விண்வெளிச் செலவினை மேற்கொண்டு பல அரிய சாதனைகளைப் புரிந்தன. 'சந்திரமண்டலத்தைக் கண்டு தெளிவோம்' என்ற பாரதியாரின் கனவை ஈண்டு நினைக்கலாம். - (ஆ) ஜெமினித் திட்டம் : இத்திட்டத்தில் இரண்டு விண்வெளி வீரர்கள் தங்குவதற்கேற்ற விண்கலம் அமைக்கப் பெற்றது. கூண்டில் இரண்டு வீரர்களை இருக்கச் செய்து அஃது ஒர் இராக்கெட்டு மூலம் விண்வெளிக்கு அனுப்பப் பெற்றது. இந்த விண்கலம் வாரக் கணக்கில் பூமியைப் பலமுறை வலம் வந்து பின்னர் பூமியை வந்தடைந்தது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பெற்ற பன்னிரண்டு விண்வெளிச் செலவுகளும் வெற்றியுடன் நிறைவேறின.” இறுதியாகச் சென்ற இரு வீரர்கள் விண்வெளியில் தங்கள் கலத்தை வேறொரு இலக்கு ஊர்தியுடன் நான்கு முறை இணைத்தும் பிரித்தும் அற்புதமான வெற்றிச் செயல் புரிந்தனர். இக் காலகட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக 24 மணி நேர இடைவெளியில் இரஷ்யர்கள் அனுப்பிய மூன்று கலங்கள் விண்வெளிக்குச் சென்றதும், அவை ஏழு விண்வெளி வீரர்களின் கூட்டுறவால் பிரிந்து இணைந்ததும், பின்னர் அவை வெற்றியுடன் பூமிக்குத் திரும்பியதும் விண்வெளிப் பயணத்தின் சிறந்த ஓர் எதிர் காலத்திற்கு அறிகுறிகளாகும். இ) அப்போலோ திட்டம் : அமெரிக்கா ந்ாசா இயக்கத்தினர்' வகுத்த மூன்று திட்டங்களில் இது மூன்றாவது திட்டமாகும். இத்திட்டத்தின்படி ஒரு மனிதனைப் பாதுகாப்பான விண்வெளிக் கலத்தில் சந்திரமண்டலத்துக்கு அனுப்பி மீட்க வேண்டும். மனிதனைச் சந்திரனுக்கு அனுப்புவதற்கு முன்னர் பல படிகளில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இச்சோதனைகளை முதலில் பூமியின் சுற்று வழியில் செய்து 38. பாரதியார் கவிதைகள் பாரததேசம் х - 39. அம்புலிப் பயணம் - கழகம் பக். 34 - 38. 40. NASA-National Aeronautics and Space Administration