பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் - 71 மிகச்சரியாக இருக்குமாறு கணிக்கப் பெற்றால்தான் திங்களில் மெதுவாக இறங்குதல் சாத்தியப்படும். இந்நிலையில் உறுதியான சுருள் விசையமைப்புகள் பொருத்தப்பெற்று 6 மீட்டர் உயரமுள்ள நான்கு கால்களால் திங்களைத் தாக்கும் கலத்தின் வேகம் மெதுவாக்கப் பெறுகின்றது. நான்குக் கால்களைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு சாதாரணமாகக் கலத்தினுள் மடக்கி வைக்கப் பெற்றிருக்கும். கலம் திங்களில் இறங்கும்போதுதான் அது விரிந்து கொள்ளும். திரும்பும் பயணம் : திங்களிலிருந்து திரும்பும் பயணமும் பூமியிலிருந்து கிளம்பினபோது மேற்கொள்ளப் பெறும் பயனத்தைப் போன்றதாகும். இது குறைந்தது மணிக்கு 8,400 கி.மீ. வேகம் வீதம் 38400 கி.மீ. தொலைவினைக் கடத்தல் வேண்டும். நடுக்கோட்டில் சிறிது நேரம் ஊர்ந்தபிறகு பூமியை நோக்கியுள்ள செங்குத்தான மலைச்சரிவு போன்ற 345,600 கி.மீ. தூரத்தைக் கடந்தாக வேண்டும். அதன் வேகம் தணிக்கப் பெறாவிடில் அது பூமியை 40,000 கி.மீ. வேகத்தில் தாக்கும். காற்றுத் தடை அதிகமாக இருத்தலின் கலம் பூமியை நோக்கி விரையும் பொழுது பூமியின் வளிமண்டலத்தில் அது விண்கல்லைப் போல் எரிந்துவிடும். வளி மண்டலத்தில் விண்கலம் நுழையும் வேகமும் மிகச் சரியாக இருத்தல் வேண்டும்; அது செங்குத்தாகவோ தொடுகோட்டு நிலையிலோ இருத்தல் கூடாது. தொடுகோட்டு நிலையில் விரைந்து சென்றால் அது வளிமண்டலத்திற்கு வெளியிலுள்ள விண்வெளிக்குத் திரும்பவும் சென்றுவிடும். பூமியின் வளிமட்லத்திற்குத் திரும்பவும் அது ஒருபொழுதும் வராது. அது கதிரவனின் நிரந்தரத் துணைக் கோளாகிவிடும். இந்த விவரங்கள் யாவும் திட்டமான கணிப்பால்தான் இயலும் இவற்றை இன்று திட்டமாக வரையறை செய்துள்ளனர். அப்போலோ-3 சரியான கோணத்தில் பூமியின் வளிமண்டலத்தில் துழைந்தபிறகு அதன் வெப்பநிலை 6000°C ஆக உயர்ந்தது.