பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 73 சந்திரனது தரையில் இறங்கும். கட்டளைப் பகுதியும் பணிப் பகுதியும் இணைந்த நிலையில் ஒரு விண்வெளி வீரருடன் சந்திரனின் சுற்று வழியில் இயங்கிக் கொண்டிருக்கும். சந்திரனில் இப் பணி முடிந்ததும் இரு விண்வெளிவீரர்களும் அம்புலி ஊர்தியில் ஏறி சந்திரனின் சுற்று வழிக்கு வருவர். அம்புலி ஊர்தியும் தாய்க் கலத்துடன் இணைக்கப் பெறும். பூமியின் சுற்று வழியில் அம்புலி ஊர்தியைப் பிரித்து 180 கி.மீ. தொலைவு விலகிச் சென்றனர். 180 கி.மீ.க்கு அப்பால் சென்ற அம்புவி ஊர்தி தாய்க்கலம் சென்று கொண்டிருந்த சுற்று வழிக்கு மேல் உயரமான மற்றொரு சுற்று வழியில் சென்று கொண்டிருநதது. அதனை அந்த வழியிலேயே விட்டுவிட்டால் இரண்டற்குமுள்ள தொலைவு இன்னும் அதிகமாகிக் கொண்டே போகும். எனவே, திரும்பி வருவதற்காகத் தலைமை விமானி அம்புலி ஊர்தியின் பொறியை இயக்கினார். ஆற்றல் மிக்க இந்தப் பொறியை இயக்கித்தான் சந்திரனின் தலையிலிருந்து மேலே வருதல் வேண்டும். இந்தப்பொறி இயக்கத்தின் பயணம் அம்புலி ஊர்தி தாய்க்கலத்தை நெருங்கிய தாழ்வான பாதைக்கு இயங்கியது. இரண்டு மணிநேரத்தில் அம்புலி ஊர்தி தாய்க்கலத்திற்கு முன்னே சென்று விட்டது. அந்தக் கீழ்ப்பாதையிலிருந்து அம்புலி ஊர்தியை ம்ெதுவாக இறக்கித் தாய்கலத்தை அணுகினர் விண்வெளி வீரர்கள். இரண்டும் ஒன்றையொன்று காணாத நிலையில்இருந்த பொழுது அவற்றிலிருந்த இராடார் (Radar) கருவிகளும் கணிப்பொறிகளும் (Computorகை கொடுத்து உதவின. இரண்டும் சந்தித்த அரைமணி நேரத்தில் இணைந்தன. இரண்டும் இணைந்த பிறகு அம்புலி ஊர்தியின் விண்வெளி வீரர்கள் தாய்க்கலத்திற்கு வந்து சேர்ந்தனர். இனி அம்புவி ஊர்திக்கு யாதொரு பணியும் இல்லையாதலால் அது கழற்றி விட்டுவிடப் பெற்றது. பூமியிலிருந்த தலைநிலையத்தார் அலைக்கட்டளைகள் மூலம் 5000 கி.மீ. உயரமாக