பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல் நோக்கில் 77 (இ) அம்புலியை அடைதல் : அப்போலோ-t பயணத்தில்தான் (எட்டுநாள் பயணம்) மனிதன் அம்புலியை அடைந்தான். அப்போலோ பயணங்களுள் இப்பயணமே மயிர்க்கூச்செரியக் கூடிய மாபெரும் பயணமாகும். (ஜூலை 1969) அப்போலோ-6, 8, 9, 10 என்ற விண்கலங்களை இயக்கிய சாட்டர்ன் (Satum) என்ற மாபெரும் இராக்கெட்டே இதிலும் பயன்பட்டது. இது ஒன்றன்மீது ஒன்றாகப் பொருத்தப் பெற்ற மூன்றடுக்கு இராக்கெட்டாகும். முதல் அடுக்கில் மட்டிலும் 1000 டன் திரவ உயிரியமும் (Liquid Oxuger) 650 டன் மண்ணெண்ணெயும் நிரப்பப் பெற்றிருந்தன. இரண்டாவது பகுதியில் மேற் குறிப்பிட்டவை தவிர தனியான திரவ நீரியமும் (Liquid Hudrogen திரவ உயிரியமும் உலந்த எரிபொருள் நிரப்பப் பெற்றது. இந்த எரிபொருளின் எடை இராக்கெட்டின் மொத்த எடையில் 92 சதவிகிதமாகும். இதன் மூன்றாவது பகுதியின் உச்சியில்தான் கட்டளைப் பகுதி, பணிப்பகுதி, அம்புலி ஊர்தி என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட அப்போலோ-1 விண்கலம் பொருத்தப் பெற்றிருந்தது. இந்த மூன்று பகுதிகளும், சேர்ந்த மொத்த அமைப்பின் உயரம் 17.55 மீட்டர். அப்போலோ - 11 விண்வெளிக் கலமும் இராக்கெட்டும் கென்னடி முனையின் தளத்தில் நின்றபொழுது அதன் உயரம் 36 அடுக்கு மாடிக் கட்டத்தின் உயரத்திற்குச் சமமாகும். அப்போலோ 1 விண்வெளிக் கலத்தை உச்சியில் தாங்கிக் கொண்டு விண்ணில் கிளம்பிய 3,816 டன் எட்ையுள்ள சாட்டர்ன் 5 இராக்கெட்டு விநாடிக்கு 15 டன் எரி பொருளை ஏப்பமிட்ட வண்ணம் எரிமலை கக்குவது போன்ற சுவாலையை பீறிட்டுக் கொண்டு மெதுவாக விண்ணைநோக்கிச் சென்றது; படிபடியாகத் தன் வேகத்தை அதிகரித்துக் கொண்டு 2% நிமிடங்களில் 144 கி.மீ. உயரத்தை அடைந்தது. இப்பொழுது முதல் நிலைப் பகுதி கழன்று