பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழில் அறிவியல் செல்வம் கொண்டு இரண்டாவது பகுதி இயங்கத் தொடங்கியது. இது விண்கலத்தை மேலும் உயரத்தில் கொண்டு செலுத்தியது. இதிலுள்ள எரிபொருள் தீர் ந் ததும் இதுவும் இராக்கெட்டினின்றும் கழன்று கொண்டது. மூன்றாவது பகுதி விண்கலத்தைத் தாங்கிய வண்ணம் பூமியைச் சுற்றி வந்தது. சந்திரனை நோக்கிப் பாய்வதற்குமுன் அஃது இரண்டரை மணி நேரத்தில் 1% தடவை பூமியை வலம் வருதல் வேண்டும். இப்பொழுது விண்வெளி வீரர்கள் எல்லாச் சாதனங்களையும் சரிபார்த்துக் கொண்டனர். இங்ஙனம் சரிபார்த்துக் கொண்ட பிறகு மூன்றாவது பகுதி இயங்கியது. இந்நிலையில் அம்புலியை அடைவதற்கு 40,280 கியt, துரத்தைக் கடந்தாக வேண்டும். இப்போது விண்கலம் விநாடிக்கு 1928 மீட்டர் வீதம் சென்று கொண்டிருந்தது. இதிலுள்ள அம்புலி ஊர்தி (கழுகு எனப் பெயரிடப் பெற்றுள்ளது) அம்புலித் தரையில் இறங்க வேண்டும். இப்பொழுது இராக்கெட்டின் மூன்றாவது பகுதியுடன் இணைந்த வண்ணம் விண்கலம் சந்திரனை நோக்கி விரைந்தது. இப்பொழுது இராக்கெட்டின் மூன்றாவது பகுதியும் விண்வெளியில் கழற்றிவிடப் பெற்றது - இனி இதற்கு வேலை இல்லாததால். . . . * மூன்று பகுதிகள் இணைந்த வண்ணம் சந்திரனை நோக்கிச் சென்று கொண்டிருந்த விண்கலம் (இதன் பெயர் கொலம்பியா) சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் சூழ்நிலையை நெருங்கியது. பிறகு அந்த ஆற்றலின் காரணமாக அம்புலியைச் சுற்றி வந்தது. சந்திரனில் இறங்கப் போகும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்டிரினும் தாங்கள் இருந்த விண்கலத்தின்றும் குகைபோன்ற ஓர் அமைப்பு வழியாக அம்புலி ஊர்திக்குள் நுழைந்து அதனை விண்கலத்தினின்றும் பிரித்தனர். இப்பொழுது கொலம்பியாவும் கழுகும் அம்புலியைச் சுற்றிக் கொண்டிருந்தன. தாய்க் கலத்தினின்றே - கொலம்பியாவில் இருந்து கொண்டே காலின்ஸ் சந்திரனைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அவருககுக் கீழாக