பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


துன்பத்தின் நிழலருவங்களாய் கிடக்கும் அறுவர் மத்தியில் பிறந்த நாள் காணும் கதைத் தலைவி தமிழ் ரோஜாவுக்குப் 'பிறந்த நாள்' வருகிறது. தன் அருமைக் காதலியின் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பும் கதைத் தலைவன் கலை வண்ணன் அங்கு அரும்பொருளாகி விட்ட அரை டம்ளர் குடிநீரை, முதல் நாள் இரவு முதலே குடிக்காது. யாருமறி யாமல் பாதுகாத்து அதனைப் பிறந்த நாள் பரிசாகத் தன் காதலி தமிழ் ரோஜாவுக்கு அளிக்க விழைகிறான். குடிக்க நீரின்றி தாகத்தால் துவண்டு கிடந்த தமிழ் ரோஜா தாக மிகு தியால் ஆர்வப் பெருக்கோடு பாய்ந்து சென்று அவன் தோள்பற்றி டம்ளரைக் கைப்பற்றி நீர் பருக முனைகிறாள். அப்போது கைதவறி டம்ளர் கீழே விழ நீர் சிந்தி வீணாகி றது. இச்சூழ்நிலையில் நீரின் இன்றியமையாமையை உணர்த்த விழையும் கலைவண்ணன்.

"ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் ஈரப்பதம்
இல்லாத பாலைவனத்தில் இரண்டு நாள்
இருக்கலாம்
ஈரப்பதமுள்ள கடலில் ஏழு நாள்வரை
பொறுக்கலாம்."
என்ற அறிவியல் செய்திகளை அமைதியாகக் கூறி விளக்கு
கிறான்.

பெளர்ணமியன்றுதான் கடல் பொங்கும் என்பது தமிழ் ரோஜா அதுவரை அறிந்திருந்த செய்தி. ஆனால், அமா வாசையன்றும் கடல் பொங்கியெழுவதைக் கண்டு வியப்பும் திகைப்பும் அடைகிறாள். அவளுக்கேற்பட்ட ஐயந் தீர்க்கும் வகையில் கலைவண்ணன் அதற்கான விஞ்ஞானக் காரணத்தை விளக்க முற்படுகிறான்.

"பெளர்ணமியில் - சூரியனும் சந்திரனும்
எதிரெதிர் திசையில் பூமியில் இருக்கின்றன.