பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


விளக்குமளவுக்கு மட்டுமே நிகழ்வுகள் அமைகின்றன. எனினும் அறிவியல் புனைகதை முயற்சியில் இவரது பங்க ளிப்பு பாராட்டத்தக்கதே என்பதில் ஐயமில்லை.

இவர் வழியில் சுவையான கதைப்போக்கோடு அரீய அறிவியல் தகவல்களைத் திறம்படத் தருவதில் தேர்ந்த படைப்பாளராகத் திகழ்பவர் 'ரேவதி' எனும் புனைபெ யரில் எழுதி வரும் டாக்டர் ஈ.எஸ்.-ஹரிஹரன் அவர்கள். அவர் 'கோகுலம்' சிறுவர் மாத இதழின் சிறப்பாசிரியராக இருப்பதால் சிறுவர் மனநிலையை உளவியல் அடிப்ப டையில் உணர்ந்து தெளிந்தவராகவும் உள்ளார். எளிய, இனியநடை கைவரப்பெற்ற இக்குழந்தை எழுத்தாளர் குழந் தைக் கவிஞர் வள்ளியப்பாவோடு கொண்டிருந்த நெருக்கம், சிறுவர் உளம் கொள்ளும் வகையில் எதை எப்படித் தர வேண்டும் எனும் உத்தி அறிந்து எழுதுபவராக உள்ளார்.

இவர் தன் அறிவியல் படைப்புக்கு அறிவியலின் பெருங் கூறான உயிரியலை மட்டும் எடுத்துக்கொண்டு, கதைப் போக்கில் சிறுவர்களை எழுதி வருகின்றார். இதற் கான காரணத்தை.

“இயற்பியல், வேதியியல், துறைகளில் அறிவியல் முன்னேற்றம், முன்னெப்பொழுதும் இல்லாத கண்டுபிடிப் புகளைக் கொடுத்து சாதனைப் படைத்து வருகிறது. இந்தக் கண்டுபிடிப்பும் சாதனைகளும் உயிரியல் துறைக்கு மட்டும் இல்லையா? கண்டிப்பாக உண்டு, ஆனால், அவை மக்களி டையே போய்ச் சேரவில்லை, இயற்பியலும் வேதியியலும் பெற்றுவிட்ட அளவுக்கு உயிரியல் மக்களின் அன்றாட வாழ்வில் தனி இடம் பெறவில்லை. இந்தத் தனியிடத்தைப் பெற்றுத்தரும் முயற்சியே இந்தக் கதைகள்" என, தான் உயி ரியலைப் பற்றி கதைகள் படைப்பதற்கான காரணத்தை

விளக்குகிறார். தமிழ் மொழியில் எழுதப்பட்ட அறிவியல்