பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

163


நிலநடுக்கக் கனவு கண்ட மணிவண்ணன் எனும் கதாபாத்திரம் கட்டிலிருந்து கீழே விழுந்து, பயத்தால் கத்துவதாகக் கூறி கதையை முடித்துள்ளார்.

டாக்டர் மலையமானின் கற்பனை ஒருவகை அதீதக் கற்பனைபோல் தோன்றினும் இன்றைய அறிவியல் உலகில் ஏற்பட்டு வரும் விரைவான வளர்ச்சி இன்னும் நூறாண்டு கட்குப் பின் ஏன் இப்படிப்பட்ட விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தியிருக்க முடியாது? என்ற கேள்விக்குரிய விடையாகவே இக்காட்சிகள் அமைந்துள்ளன.

அறிவியல் சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ள மலையமான் 'கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை' என்ற பெயரில் அறிவியல் புதினமொன்றையும் எழுதியுள்ளார். கடலாய்வைக் கருப்பொருளாகக் கொண்ட இந்த அறிவியல் புதினத்தில் கடலாய்வைப் பற்றிய அனைத்துக் தகவல்களும் கதையோட்டத்தோடு விவரிக்கப்படுகிறது.

கடலாய்வறிஞரான அரசு தன் கடலாய்வு நண்பர் அறிவு மணியின் உதவியோடு, கடலாய்வில் ஆர்வம் கொண்ட தன் மகன் முத்துவையும் அழைத்துச் செல்கின்றார். கடலுக்கடியில் அறிவு மணியும் முத்துவும் கடல்ராணி எனும் கலத்தில் சென்று கடலாய்வில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கடலடிக்குகையொன்றில் சிறைப்படுத்தப் படுகின்றனர். முத்து சென்ற ஆய்வுக்கலம் திரும்பாததால் கடல்மேல் உள்ள தாய்க் கப்பலிலிருந்து முத்துவின் தந்தையும் மற்றவர்களும் கடல் மலர்' எனும் மற்றொரு கடலாய்வுக்கு கலத்துடன் கடலடி சென்று தேடுகின்றனர். எதிர்பாரா நிலையில் இக்கலமும் சிறைபிடிக்கப்பட்டு முந்தையக் கலத்தோடு சிறை வைக்கப்படுகிறது.

இவ்வாறு தங்கள் இரு கலங்களையும் சிறைபிடித்தவர்கள் வேற்றுக் கிரகங்களிலிருந்து வந்துள்ள விநோத