பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

165


எடுத்துக்கூறி விளக்குகிறார் ஆசிரியர். இத்தகைய கடலாய்வுக்கு 'ரோபோ' எனப்படும் எந்திர மனிதர்களை எந்த அள வுக்குக் கடல் ஆய்வுக்கும் பாதுகாப்புக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் சிறப்பாக விளக்கத் தவற வில்லை. "வேற்று உலகத்தைச் சேர்ந்தவர்களை இங்கு வந்து கடலடியில் கொட்டிக் கிடக்கின்ற பலவிதமான தாதுப்பொருட்களைத் திருடிக் கொண்டு போகிறார்கள், ஆனால், இது பூமியின் சொந்தக்காரர்களுக்குத் தெரியவில்லை" என ஆசிரியர் தன் ஆதங்கத்தைக் கடலாய்வாளர் வாயிலாக வெளிப்படுத்துவதன் மூலம் கடலுக்கடியில் ஏராளமான உலோகத் தாதுக்கள் பயனின்றிக் கொட்டிக் கிடப்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

திகிலூட்டும் திருப்பங்களுடன் மர்மக்கதைச் சாயலில் கதையைப் பின்னியுள்ள ஆசிரியர், கடல் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுமூலம் கடலடிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நேரிடையாகக் காட்டி விடுகின்றார். கதைப் போக்கில் நாமும் கடலடி ஆய்வில் நேரடியாகப் பங்கு கொண்ட மனநிலையைப் பெறுகிறோம்.

சிறுவர்கட்காகவும் பெரியவர்கட்காகவும் தமிழில் அறிவியல் புனைகதைகளை சிலர் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுத முனைந்தவர்களில் சிலர், அறிவியலைவிட தங்கள் புதினத்தின் கதையம்சங்களில் அதிகக் கவனம் செலுத்தி, அறிவியல் அம்சங்களை கோட்டை விட்டுவிட்டு, மர்மக் கதை, அல்லது துப்பறியும் கதையாக முடித்து விடுவதுண்டு. அங்கே அறிவியலானது பெயரளவுக்கே இடம்பெற நேர்வது தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால், மலையமான் அறிவியல் தகவல்களை தருவதே புதினத்தின்