பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்

தாகக் கணித்தறியப்பட்டுள்ளது. இது விழுந்த இடத்தில் மாபெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப் பள்ளத்தின் குறுக்களவு 2கிலோ மீட்டராகும். ஆழம் இருநூறு மீட்டருக்கும் அதிகமாகும்.

மூன்று இலட்சம் ஆண்டுகட்கு முன்பு இத்தகைய விண்கற்கள் முழுவீச்சில் விழுந்து தாக்கியதால் தான் அப்போது பூமியில் வாழ்ந்த டினோசார்ஸ் போன்ற இராட்சத விலங்குகளெல்லாம் அழிய நேர்ந்தது என்பது கடந்த கால வரலாறாகும்.

விண் வீழ்கற்களில் இரும்பு, சிலிகா, மெக்னீசியம், மைகா, கரி போன்ற தாதுப்பொருட்கள் அடங்கியிருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு ஐம்பது மாடிக் கட்டிட அளவுள்ள பெரும்விண்கல் ஒன்று பூமிக்கு அருகாக வானில் பறந்து சென்றதை விஞ்ஞானிகள் கண்டனர். இத்தகைய மாபெரும் விண்கல் ஒன்று2004ஆம்ஆண்டில் பூமியின் மீது, ஏதாவதொரு இடத்தில் வீழலாம் என்பதுதான் நாளிதழ். செய்தி இவ்வறிவியல் செய்தியை மையமாகக் கொண்டு புனையப் பட்ட “எரிகல்" புதினக் கதையை இனி பார்ப்போம்.

கதையின் தொடக்கம் படிக்கும் வாசகர்களின் ஆர்வத்தைத் துண்டுவதாக அமையவேண்டுவது அவசியம். இவ்வுத்தியைக் கையாண்டு கதையின்மையத்தை ஆரம்பமாக வைத்துத் தொடங்கி யுள்ளார் ஆசிரியர்.அப்போதுதான் படிப்போர் 'ஏன் இந்தப் பீடிகை?, என்ற வினாவுணர்வோடு கதை யோட்டத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்த இயலும்.

மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு அடர்ந்த மரங்களுக்கிடையே சிலர் கையில் சிலவகைக் கருவிகளை வைத்துக் கொண்டு கூடிக்கூடிப் பேசுவதிலிருந்து அவர்கள் ஏதோ ஒரு