பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா 179

கேற்ப ராக்கெட் செயல்படும். இதன் மூலம் உலகை நோக்கி விரைந்துவரும் விண்கல்லாகிய எரி கல்லைத் தாக்கும் வகையில் வெடிக்கச் செய்யும் நேரத்தில் சென்றாலும், குண்டை வெடிக்கச் செய்யும் நேரத்தில் உளவாளிக் கும்பல் தங்கள் வசமுள்ளரிமோட் கன்டரோல் மூலம் ராக்கெட்டைத் திசைமாற்றிச் செல்ல வைக்க முடியும். அதன் விளைவாக குண்டுவெடிப்பு எதற்குமே ஆளாகமல் எரிகல் பரத் நாட்டின்மீது தொடக்கத்தில் எதிர்பார்த்தபடியே விழுந்து மாபெரும் சேதத்தை ஏற்படுத்தி விட முடியும். இதனால் பரத் நாட்டின் முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து விட முடியும். இதைச் சுலபமாக ஆள் மாறாட்டம் மூலம் சாதித்து விட்டதாகக் கருதி மோதி மகிழ்ந்தார்.

{{ }}இறுதிக்கட்ட சோதனையாக சலாமும் மற்ற விஞ்ஞானிகளும் சோதித்துப் பார்க்க, எல்லாமே செம்மையாக இருந்தன. இறுதியாக ரிமோட் கன்ட்ரோலை இயக்கிப் பார்க்க, தளக்கட்டுப்பாட்டு நிலைய ரிமோட் கன்ட்ரோலும் ராக்கெட்டிலுள்ள கன்ட்ரோலும் ஒருங்கிணையவில்லை. தரைக் கட்டுப்பாட்டுக்கு உட்படாததாக ராக்கெட் கருவி அமைக்கப்பட்டிருந்தது. ராக்கெட்டில் அமைந்துள்ள கருவி சரியாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் கட்டுப்பாடுகள் வேறெங்கோ உள்ள ரிமோட் கன்ட்ரோலுடன் இணைக்கப் பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் சலாமுக்கு ஏற்பட்ட போது. அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.

{{ }}இந்த அறிவியல் புதினத்தின் திருப்புமுனையான இச்சம்பவத்தைத் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலையில் கதையை நகர்த்துகிறார் ஆசிரியர்.

{{ }}அவசர அழைப்புக்கிணங்க தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து வெளிவந்த சலாமின் சக விஞ்ஞானி,