பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

மணவை முஸ்தபா 187

படைத்த வில்லுப்பாட்டு மூலம் கதையோட்டத்தோடு எவ்வளவு கடினமான நுட்பமிக்க அறிவியல் செய்தி களையும் இசை நயத்தோடு நகைச்சுவையாகச் சொல்லிவிட முடியும். நிலாப் பாட்டுப்பாடி குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போல, சுற்றுப்புறத் தூய்மை பற்றிய செய்தியாயினும் அல்லது எரிசக்தி சேமிப்புப் பற்றிய விஷயமானாலும் பாமர மக்களின் உள்ளத்தைக் கவரத்தக்க சிறுகதையோடு இவ்விஷ யங்களை வில்லிசையின் துணையோடு நகைச்சுவையாகச் செல்லும்போது அவர்கள் அதை எளிதாக ஏற்று சீரணித்துக் கொண்டு செயல்படுகிறார்கள்; பயனடைகிறார்கள்.

 இன்னும் சொல்லப்போனால் படித்தவர்கள் அறிவியல் செய்திகளை அறிந்து கொள்ள எத்தனையோ வழி முறைகள் உண்டு. புத்தகங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்; பத்திரிகைளின் மூலம் செய்திகளை எளிதாக அறிந்து கொள்ள இயலும். ஆனால் கிராமப்புறம் போன்ற பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கு அறிவியல் செய்திகள் எளிதாகப் போய்ச் சேர வேண்டுமென்றால் வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்றவைகள் மூலமே சென்றடைய வேண்டும். எனவே நல்ல கதையம்சத்தோடு கூடிய வில்லிசைப் பாடல்களை நகைக்சுவையோடு பாடி எளிதாக அறிவியல் விஷயங்களை உணர்த்திவிட முடியும். இதற்கான கதை யையும் பாட்டையும் வில்லுப்பாட்டுக்காரர்கள் தான் புனைய வேண்டும் என்பதில்லை. அவர்களைவிட அறிவியல் விஷயங்களை நன்கு படித்து, அறிந்துணர்ந்துள்ள படைப்பிலக்கிய ஆசிரியர்கள் 'அறிவியல் புனைகதை' களை உருவாக்கிக் கொடுத்து விட்டால் போதும், வில்லிசை வாணர்கள் அதைத் தம் போக்கில் நகைச்சுவையோடு கூடிய இசைப்பாடல்களாக வில்லில் இசைத்து, மக்களின் உள்ளத் திற்குள் கொண்டு சென்று விடுவார்கள். சாதாரண மக்கள் சிறுவர் முதல் பெரியவர் ஈராக அனைத்துத் தரப்பினரும்