பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


வில் கால்பதித்ததோடு, செவ்வாய்க் கோள், சனிக்கோள் போன்றவற்றையெல்லாம் முனைப்போடு ஆய்ந்து அதுவரை அறியாதிருந்த உண்மைகளையெல்லாம் வெளிப்படுத்தி உலகைத் திகைப்பிலாழ்த்தி வருகிறது அறிவியல் ஆய்வுலகம்:

விண்வெளி ஆய்வில் தொடக்க நிலையிலான கால கட்டத்தில் வாழ்ந்த பாரதியோ அறிவியல் வளர்ச்சி மீது கொண்டிருந்து அளப்பரிய நம்பிக்கையின் விளைவாக, சந்திர மண்டலம் முதலாகவுள்ள விண்ணியல் உண்மைகளையெல்லாம் அறிய நம்மால் முடியும், அதை அறிவியல் மூலம் சாதிக்க வாரீர் என நம்மையெல்லாம் அழைக்கவும் செய்தார்.

நிலவைக் காட்டிக் குழந்தைக்குச் சோறுட்டும் தாய் 'நிலவில் நூல் நூற்றுக் கொண்டிருக்கும் கிழவி'பற்றி கதை கூறும் போக்கு மிகுந்த ஒரு சமுதாயத்தில், 'சந்திரனுக்குச் சென்று அங்குள்ள நிலமைகளையெல்லாம் ஆய்ந்தறிவோம். வாரீர்' என மக்களை அழைக்க முற்பட்ட மன நிலையும் சிந்தனையும்தான் அறிவியல் கண்ணோட்டமாக அவனிடத்தில் மலர்ந்து மணம் வீசுகிறது.

பாரதியின் அறிவியல் கண்ணோட்டத்திற்கு அவன் பாடல்களில் எத்தனையோ சான்றுகள் காணக் கிடைக்கின்றன. அவற்றில் மேலும் ஒன்றிரண்டைக் காண்போம்:

இன்று இன்று கங்கையையும் காவிரியையும் ஒருங்கிணைத்து நீர்வளம் காணும் திட்டம் பற்றி பேசுவதோடு, அவற்றைச் செயல்படுத்திக் காரியமாற்ற முற்படுகிறோம். ஆனால், பாரதி வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு எண்ணமே முளைவிட்டிருக்கவில்லை. இத்திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் பொறியியல் வல்லுநர் டாக்டர் விஸ்வேஸ்