பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

45



வளர்த்து வளமடையச் செய்பவர் ஆய்வறிஞர் எனும் உயர்நிலையை அடைகின்றார்.

{{ }}பகுத்தறிவுப் பண்பும் கற்பனை ஆற்றலும் எதையும் ஊடகமாக அனுமானிக்கும் திறனும் உயிரினங்களிலேயே மனிதனுக்கு மட்டுமே வாய்த்த உயர் சிறப்புக்களாகும்.

{{ }}இருக்கும் ஒன்றைக் கொண்டு இல்லாத ஒன்றை அஃது எப்படியெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனத் தான் விருப்பும் வண்ணமெல்லாம் நினைத்து. அதனைக் கற்பனையாகச் சித்தரித்துக் காட்டும் வல்லமை மனிதனுக்கு மட்டுமே கைவரப் பெற்ற ஒன்றாகும். அவன் சிந்தனை இடத்தையும் காலத்தையும் கடந்து செல்லும் பேராற்றல் பெற்றனவாகும். இல்லாதவற்றையும் இருப்பதாகக் கற்பனை செய்யும் இத்தகைமை எண்ணி வியக்கத் தக்க ஒன்றாகும். அறிவியல் எல்லைகளையே ஊடுருவிப் பார்க்கும் அவனது அறிவாற்றலும் கற்பனை வளமும் ஊகத்திறனும் அவன் பெற்ற பெரும் பேறாகும். சுருங்கக் கூறின் ஆய்வுகுத் தாயான அனுமானமே அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அறிவியல் கற்பனையும் படைப்பாற்றலும் வளரும் அறிவியலுக்கு ஒர் உந்து சக்தி என்றே கூற வேண்டும்.

நாளும் புதுமை காணும் அறிவியல்

{{ }}அறிவியல் கண்டுபிடிப்பில் எதுவுமே என்றென்றும் நிலையானவை என்று கூற முடியாது. ஒவ்வொரு நாளும் மாற்றங்களையும் திருத்தங்களையும் ஏற்று வளர்ந்து வரும் ஒர் துறையாகும் அறிவியல்.

{{ }}நேற்று உண்மையானது எனக் கருதப்பட்ட ஒன்று இன்றைய தொடர் ஆய்வின் விளைவாகப் புதிய உண்மைகளை உள்ளடக்கியதாக அமையும்போதே நேற்றைய