பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

மணவை முஸ்தபா 57

அறிவியலறிவும் அறிவியல் கதையார்வமும்

 அறிவியல் கல்வியைப் பொறுத்தமட்டில் ஆண்களை விடப் பெண்கள் அண்மைக்காலம் வரை பின் தங்கியவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அறிவியல் கல்வி பெற்ற பெண்களிலும் அறிவியல் நுட்பச் செய்திகளைப் புரிந்து சுவைத்துப் படிக்கும் தரமுடையவர்களின் தொகையும் குறைவானதே யாகும். எனவே, தரமான,உயர்மட்ட அறிவியல் கல்வி பெறாத பெண்டிர் அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்படும் கதைப் படைப்புகளைப் படிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அறிவியல் புனைகதைகளுடன் இடம் பெறும் அறிவியல் நுட்பச் செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்வதில் அவர்கட்கேற்படும் இடையூறுகளே இதற்குக் காரணமாகும்.
 எனவே, அறிவியல் புனைகதைகளைப் பற்றிய சில அடிப்படை உணர்வுகளை வாசகர்கள் குறிப்பாகப் பெண் வாசகர்கள் அறிவது அவசியம்.
 அறிவியலின் நோக்கம் ஒரு பொருளின் மூலத்தன்மையை இயல்பை முழுமையாக அறியச் செய்வதாக அமையவேண்டும். அறிவியல் புனைகதையின் உயரிய நோக்கமும் அத்தகையதாகவே இருத்தல் வேண்டும். மேன்மேலும் புதிய புதிய அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்ளத் தூண்டுவதாகவும் அஃது அமைய வேண்டும்.

அறிவியலும் இலக்கியமும்

 அறிவியலும் இலக்கியமும் இரு வேறு தனித்த பண்புகளை அடித்தளமாகக் கொண்டு அமைத்துள்ள துறைகள் என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது.
 அறிவியல் என்றால் என்ன? 'மனிதன் தன்னையும், தன்னச் சுற்றியுள்ள சுற்றுப் புறத்தையும், தான் காணும்