பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

58 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

இயற்கைச் சூழலையும் அவற்றில் மறைபொருளாய் அமைந்துள்ள இரகசியங்களையும் தன் சொந்த முயற்சியால் அறிவின் துணை கொண்டு, சோதனைகளின் உதவியோடு தெளிவாகப் புரிந்துகொள்ளும் முயற்சியே அறிவியலாகும்’ எனச் சுருங்கக் கூறலாம்.

 இதிலிருந்து அறிவியல் என்பது அறிவியலை அடித்தளமாகக் கொண்டு ஆயும் முயற்சி என்பது பெறப்படுகிறது. நாம் மேற்கொள்ளும் ஆய்வு எத்தகையதாயினும் அவை ஏன்? என்ன? எப்படி? என்ற கேள்வி உலைக் களத்தில் இடப்பட்டு, சோதனையில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில் உருப்பெறுவது அறிவியலாகும். இதில் முனைப்பாக ஈடுபடுவது அறிவும் ஆராய்ச்சியுமே யாகும்.
 இலக்கியத்தின் தன்மை இதனினும் வேறுபட்டதாகும்.

இதில் அறிவுப்பூர்வமாக விடுக்கப்படும் கேள்விக்கணைகளை விட உணர்ச்சிப்பூர்வமாக எண்ணுவதற்கே முதலிடம். மனதுக்கு மகிழ்வூட்டும் இன்பமே இலக்கியத்தின் உயிர் மூச்சு. 'ஒரு மொழியில் வாயிலாக வாழ்க்கை முறையை எடுத்தியம்புவதுதான் இலக்கியம்' என ஹட்சன் என்பார் இலக்கியத் தன்மைக்கு இலக்கணம் வகுத்துக் கூறியுள்ளார். இவ்வின்ப உணர்வை ஊட்ட உணர்ச்சி எனும் குதிரைகள் பூட்டப்பட்ட கற்பனைத் தேரில் ஏறியமர்ந்து சிந்தனைச் சாட்டையைச் சொடுக்கி, நினைத்த வாறெல்லாம் இன்பப் பயணம் மேற்கொள்வதே இலக்கிய உத்தி.

 'அறிவியல்’, ‘இலக்கியம்' ஆகிய இரண்டின் தனித் தன்மைகளும் ஒருங்கினைணந்து ஒருங்க கொண்ட நிலையில் அமைவதே'அறிவியல் இலக்கியம்' ஆகும்.
 இச்சமயத்தின் இலக்கியத்திற்கும் அறிவியல் இலக்கியத்திற்கும் இடையேயுள்ள மிக முக்கியமான ஒரு வேறுபாட்டை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.