பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்


அறிவியல் புனைகதை நூல்களைப் படிக்கின்றனர். போதிய அளவு ஆங்கிலப் புலமை பெறாதவர்கள் அம்மாதிரி தமிழில் நூல்களோ சின்னத் திரைப்படங்களோ வெளிவ ராதா என ஏங்குகின்றனர்.

முன்பு, செயற்கைக் கோள் மூலம் விண்வெளி மண்ட லங்களுக்குச் செல்வது போன்ற கதையமைப்புடன் கூடிய 'கலை அரசி' என்ற திரைப்படம் வந்தது. அதைத் தொடர்ந்து அறிவியல் அடிப்படையிலான கதையம்சங்க ளைக்கொண்ட 'விக்ரம்' போன்ற திரைப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் திறம்பட்ட முறையில் அறி வியல் அடித்தளப் போக்கோடு கூடிய திரைப்படங்கள் அண்மைக்காலம் வரை பெருமளவில் வெளிவரவில்லை என்றே கூற வேண்டும்.

அறிவியல் புனைகதை - காலக் கட்டாயம்

இன்று மாற்றங்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்து வருவது போன்றே, படிப்பிலும் ரசனையிலும் மாற் றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வரவேற்கத்தக்க இம் மாற் றங்கள் படைப்பிலக்கியத் துறையைத் பொறுத்த மட்டில் வெகு வேகமாக நிகழ்ந்து வருவதாகக் கூறலாம்.


பொழுதை வெறுமனே போக்க அல்ல;
பொழுதை பயனுள்ளதாக ஆக்க

சாதரணமாக தமிழில் வெளிவரும் புனைகதை இலக் கியங்களைப் பொறுத்தமட்டில் அவை 'பொழுது போக்கு இலக்கியப் படைப்புகள்' என்றே அழைக்கப்படுகின்றன. அதற்கேற்ப வெளிவரும் புனைகதைப் படைப்புகளில் பெரும்பாலானவை வெறுமனே அசைபோடும் படைப்புகளா கவே அமைந்து வருவதை மறுப்பதற்கில்லை. அன்றாட