பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

76 தமிழில் அறிவியல்

              படைப்பிலக்கியம்

மின்றி அறிவியல் செய்திகளை உண்மைகளே எளிதாக வாசகட்கு உணர்த்த முடியும்.

 ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஹெர்வே பாசின் என்பவர் அண்மையில் காலமான மிகச்சிறந்த புனைகதை எழுத்தாளர். இவரது படைப்பிலக்கியங்களை பற்றி விரிவாக, பாத்திரங்கள் மூலம் அலசி ஆராயும் போக்குடையன வாகும். ஆயினும்,அவற்றில் இடம்பபெறச் செய்வதன் மூலம் அப்படைப்பைப் படிக்கும் வாசகர்களிடையே அறிவியல் அறிவையும் உணர்வையும் ஊட்டத் தவறுவதில்லை.
 இவரது படைப்பிலக்கியங்களில் இடம்பெறும்  அறிவியல் செய்திகள் பலவும் கற்பனைச் செய்திகளேயாயினும் அவை அறிவியல் உண்மைகள் என்ற தோற்றத்தையே வாசகர்களிடம் ஏற்படுத்தி விடுகின்றன. இவரது அண்மைப் படைப்பிலக்கியம் 9ஆம் நாள் என்பதாகும். இத்தலைப்பின் உட்கருத்தைப் பற்றி விளக்கும்போது,
 'இறைவன் ஆறுநாட்களில் உலகைப் படைத்தான். ஏழாம் நாள் ஒய்வெடுத்தான். எட்டாம் நாள் கவர்க்கத்திலிருந்து ஆதாம் ஏவாளை வெளியேற்றினான். இப்போது ஒன்பதாம் நாளில் (ஊழி) நுழைந்திருக்கிறோம். இது படைத்தவன் இடத்தை ஃபாஸ்டிலிய மனிதன் பிடித்துக் கொண்டிருக்கும் காலம். படைப்பாற்றலின் பல்வேறு உன்னதங்களை அணுகுவதற்கு மனிதனின் அறிவுத்திறன் நமக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது.அது வலுவான அறிவாற்றலையும் கொண்டிருக்கிறது.ஒரு போதும் முழுமை பெறாத மனமகிழ்ச்சி, உலகம் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளுதல் - இவ்விரண்டில் ஒன்றை மனிதகுலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது என்பதை ஒருவித எச்சரிக்கையாக உணர்த்துவதே இந்நூலின் நோக்கம் என்பதை ஆசிரியரே விளக்கியுள்ளார்.