பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

நாமெல்லொரும் வணங்குதற்குரியவன் அல்லாஹ்வே என்றும் நல்லோர், தீயோர் எல்லோருக்கும் இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் மீது இரக்கம் காட்டுபவனும் அல்லாஹ்வே என்பதை

"வணங்குதற் குரியோன் அல்லா மலர்தலை
                                   உலக மீதில்
இணங்கிடு நல்லார் பொல்லார்க்கிரங்கிடும்
                                 ரஹ்மான் பின்னாள்
பிணக்கறு முஸ்லீம்கட்கே பேரருள்
                                    புரியம் ஆதி
அணங்கிலா ரஹீமென்றோதும் அர்ஹமுர்
                                  றாஹி மீனே"

எனக் கூறுகிறார்.

இறைவனாகிய அல்லாஹ்வுக்கு தொண்ணுாற்று ஒன்பது திருப்பெயர்கள் உண்டு. இறைவனைப் போற்றும் போது இத்திருப்பெயர்களைப் பயன்படுத்தி போற்றுவது வழக்கம். இப்பெயர்கள் குறிக்கும் உட்பெயர்களையெல்லாம் தெளிவாக அறிந்துணர்ந்தவராக, இத்திருநாமங்களின் அரபுச் சொற்றொடர்க்குப் பொருள் விளக்கம் தரும் வகையில் பாடல்களைப் பாடியளித்துள்ளார் ஆசிரியர்.

மக்களுக்கு வேனடிய உணவை அளிப்பதால் அல்லாஹ்வை 'ரஸாக்' என்ற பெயரால் அழைக்கிறோம். இம்மை மறுமைப் பேறுகளை மனிதனுக்கு அளிப்பதால் இறைவனை 'பத்தாஹ்' எனும் பெயரால் போற்றித்துதிக்கிறோம. எல்லையிலா ஞானத்தையுடைய அறிவாளன் என்பதால் 'சலீம்' என்ற அழகுப் பெயரால் வல்ல அல்லாஹ்வை வாழ்த்துகிறோம். பிரியும் உயிரை மேவிப் பிடிப்பவன் எனும் பொருளில் காயில் எனும் சிறப்புப்