பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100



மற்றொரு புகழ்பெற்ற முனாஜாத்து கீழக்கரை செ.மு. செய்யிது முகம்மது ஆலீம் புலவர் இயற்றியமுனாஜாத்து மாலிகை' என்பதாகும். பன்னிரண்டு முனாஜாத்து பாடல்கள் அடங்கிய இந்நூல் பண்டிதர் முதல் பாமரர் ஈராக எல்லோருக்கும் மிக எளிதாக விளங்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. மாலை எனும் பொருளடிப்படையில் மாலிகை எனும் சொல் இந்நூலில் கையாளப்பட்டுள்ளது.

இந்நூலின் அவையடக்கப் பாடலில் தான் இந்நூலை எழுதத் தொடங்கியபோது தன் மனத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளையும் அதனால் உருவான உள் ளத்தின் பதை பதைப்பையும் மன முருகக் கூறுகிறார். இறைவனாகிய வல்ல அல்லாஹ்வை போற்றி, பெருமானாரைப் புகழ்த்து ரைக்கும் அப்பாடலில் இவ்வாறு போற்றிப் புகழ தனக் கென தனியாற்றல் ஏதுமில்லையே என ஏங்குகிறார் . இருப்பினும் இப்பணியைத் துணிந்து மேற்கொண்ட தனால் தன் உள்ளத்தில் ஏற்பட்ட பதைபதைப்பை,

'பூவா ருலகம் புனைக்கும்வல் லோனை

புகழ்ந்து நின்று

மாவா ருயர் சல வாத்தால் முகம்மதை

வாழ்த்திய பின்னர்


நாவா ருசித முனா ஜாத்து மாலிகை

நன்கு இயம்பப்


பாவா ரரும்பதந் தேரா தநெஞ்சம

பதைக்கின் றதே

'

என அவை அடக்கத்தோடு கூறி அமைகிறார்.

அடுத்து வரும் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்' எனும் பொருள்படும் அரபுமொழித் தொடரான’ அர்ஹ்முர்ராகிமீன்' என்பதை அமைத்தே பாடலை முடிக்கிறார்.