பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99



"தோத்திரம் செய்யத் துணையாயிணையில்
பாத்திரம்பெற்றுப் பாக்கியம் பெறவே
முத்திசேர் நாகை முதுநகர்
தத்துவம் பூண்ட ஷா குல் ஹமீதே ’’

என உளமுருகிப் பாடுகிறார்.

முனாஜாத்துப் பாடல்களில் தங்கள் குறையிரந்து வேண்டுதலோடு, தங்கள் தொடர்புடையோருக்காகவும் இறைஞ்சி வேண்டுவதுண்டு. கல்விச் சுடர் ஏற்றிய ஆகிரியர், இறைமறை கற்பித்து ஒழுக்க வாழ்வுக்கு வழி வகுத்த நல்லுரையாளர்கள் தங்கள் மீது அன்பைப் பொழிந்து அருளுணர்வோடு துணை நின்றோர். இடுக் கண் எதிர்ப்பட்ட காலத்தில் முனைந்து நின்று உதவி, இடர் களைந்தோர். உறுதுணையாயமைந்த உற்றார் உறவினர் ஆகியோருக்காகவும் குறையிரந்து முறையிடுவது போன்ற முனாஜாத்துப் பாடல்கள் தமிழில் நிரம்பவுண்டு. சான்றாக, பதுருத்தீன் புலவர் முகியித்தீன் ஆண்டகையின் பேரில் பாடிய "முகியித்தீன் முனாஜாத்து, எனும் அரிய பக்திப் பனுவல்களில் முப்பத்தைந்தாவது இறுதிப் பாடலாக இடம் பெற்றிருக்கு பாடலில் கீழ்க் கண்டவர்கட்காக குறையிரந்து அருள் வேண்டுகிறார்.

'எந்தனக்கு அறிவு தந்தோர்
இறைகுர்ஆன் ஓதித் தந்தோர்
வந்தனைக் கிருபை வைத்தோர்
வரும்பொருள் உள்ள மீந்தோர்
சொந்தமாங் கிளைஞ ரெல்லார்
சொற்பிழை பொறுததெந் நாளு
தந்தருள் கிருபை செய்வீர்
சமது யா முஹியித்தீனே'