பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

மானார்என்பதை மேற்கண்ட பாடல் மூலம் அழகாக உணர்த்தி விடுகிறார் ஆசிரியர் கீழக்கரை செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்கள்.

இவ்வாறே பெருமானாரின் மருகர் அலி (ரலி) அவர்கள் மீது பாடப்பட்ட முனாஜாத்துப் பாடல்களின் 'அலி யுல்லாவே' என முடிக்கிறார். இப்பாடல்களின் மூலம் அலி (ரலி) அவர்களின் அறிவாற்றலும் வீரமும் பிற குணச் சிறப்புகளும் தெளிவாகவும் சுவையாகவும் விளக்கப்படுகின்றன. வீரத்திருவுரு அலி (ரலி) அவர்கள் ஐம்பொறிகளை அடக்கியாலும் அருந்திறனைப் பாராட்டும் போது.

"பொறியெனும் கரிகள் யாவும்
புவன்தொரும் புகுந்திடாது
அறிவெனும் துறட்டி தன்னால் அடக்கியே
புறத்தில் வீழ்த்தி
நெறியெனும் கொலுவி லார்ந்து
நிறையருள் சிறந்தநாளு
முறைவழி பிழைத திடாத
முர் தலா அலியுல்லாவே'

எனக் கூறும் இப்பாடலைப் படிக்கும்போது, அறிவெனும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி யாள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவனாவான் எனக் கருத்துரைக்கும் வள்ளுவரின் குறளான.

'உரன் என்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரன என்னும் வைப்பிற்கோர் வித்து'

என்ற குறட்பா நம் சிந்தையில் நிழலாடவே செய்கிறது.

அடுத்து மிகச் சிறந்த முனாஜாத்துப் பாடல்கள் அடங்கிய நூல் நவநீத புஞ்சம்' என்பதாகும். இந்நூலுள் திருப்-