பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

படைப்போர் இலக்கியங்கள்

இதுவரை நாம் பார்த்த புதுவகை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள் அரபி,பெர்சிய மொழிகளில் அமைந்துள்ள அமைப்பை-பெயரை அடியொற்றி தமிழில் அறிமுகப்படுத்திய இலக்கிய வடிவங்களாகும். தமிழ்க்கேயுரிய முறையில் தனித்துவமுள்ள புதுவகை இலக்கியவடிவங் களைத் தமிழ்ப் பெயராலேயே தமிழில் தோற்றுவித்துத் தமிழைப் பல்லாற்றானும் போற்றி வளர்த்துள்ளனர் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள். அவற்றுள் படைப்போர்’ என்பது குறிப்பிடத் தக்க இலக்கிய வடிவமாகும். இப்புது வகை தமிழ் இலக்கிய வடிவத் தோற்றத்திற்கு மூலாதாரமாக அமைவது அரபி மொழியில் எழுந்த படைப்போர் பற்றிய இலக்கியங்களாகும்.

இவ்வகையில் தமிழில் பரணி இலக்கியங்கள் பலவுண்டு ஆனால் அவை போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய மன்னனின் வெற்றிப் பெருமிதத்தைக் கற்பனை வளத்தோடு மிகுதிப்படுத்திப் பாடுபவைகளே தவிர முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட படைப்போர் இலக்கிய அமைப்பு முறையில் உருவானவை அல்ல.

ஏறக்குறைய ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வரும் 'வார் பேலட்' (war Ballad) எனும் இலக்கிய வகையினவாகத் தமிழில் உருவானவை படைப்போர் இலக்கியங்கள் எனக் கூறலாம். இதிலுள்ள படை, போர் என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் குறிப்பனவாகும்.

போர் நிகழ்ச்சிகளையும், படை நிலைகளையும் படை நடத்தும் பாங்கையும், வீரர்களின் ஒலி முழக்கங்களையும் அவர்தம் வீர உணர்வுகளையும், படைவீரர்களின் தோற்றங்களையும் படைக்கள வர்ணனைகளையும்,அடித்தள-