பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

மாகக்கொண்ட படை நூல்கள் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை. இக்குறையை நீக்க எண்ணிய இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் படைப்போர் இலக்கியங்கள் பல வற்றைத் தமிழில் யாத்துள்ளனர்.

மேலும், இவ்வகை இலக்கியம் உருவாக வேறொரு காரணமும் இருந்திருக்க வேண்டும் இஸ்லாமிய நெறிகள் கொள்கை கோட்பாடுகளிடத்து நீங்காப் பற்றும் பாசமும் கொண்ட முஸ்லிம்கள் அவற்றை வீரப் பனுவல்களாக்கி, நெஞ்சத்திலிருத்திக் கொள்ள விழைந்ததும் காரணமாக இருக்கலாம். இதற்குப் பாலுணர்வு அடிப்படையிலான பரணி இலக்கியங்களில் காணப்படும் கடைதிறப்பு, காளி பாடியது, பேய் பாடியது. பேய் முறைப்பாடு, அவதாரம் ஆகிய வைப்பு முறைகள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டனவாக அமைந்துள்ளதன் காரண மாக தேவையை அனுசரித்துப் புதுவகை இலக்கியத்துறை யாகப் படைப்போர் எனும் இலக்கிய வடிவத்தை முஸ் லிம் தமிழ்ப் புலவர்கள் உருவாக்கியிருக்கலாம். ஆயினும் பரணி இலக்கியத்திற் காணும் போர் பாடியது' என்ற அமைப்பினை மட்டும் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த புகழ் பெற்ற போர்களான பத்ரு, உஹது, ஹாசைன் , கைபர், அகழப் போர். கர்பலா போன்றவிடங்களில்நடை பெற்ற போர்களைப் பற்றிப் புலவர்கள் பாடியதாகத் தெரியவில்லை. ஆயினும், பெருமானார், அலி (ரலி),பெரு மானார் பேரர்களான இலாம் ஹஸன், இமாம் ஹசைன் போன்றவர்கள் தொடர்புடைய வரலாற்று நிகழ்ச்சிக்கூறு களையே மையப் பொருளாக்கி, வேறு சில வீர மாந்தர் களைக் கற்பனையாகப் கதைப்போக்கோடு படைத்து. இணைத்து படைப்போர் இலக்கியங்களை உருவாக்கியுள் ளனர். சில போர்கள் வரலாற்றுப் பின்னணியுடையன போல் தோற்றம் தரும கற்பனைப் போர்களாகும்.