பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

கள் மீதேற்றி தன் மைந்தர் உடன் வர மதினா மாநகர் நோக்கிப் பயணமானார்

திடீரென எங்கிருந்தோ வந்த படையினர் யெமன் நாட்டு மன்னரையும் அவர்தம் மைந்தரையும் உடன் வந்தோரையும் சிறைபிடித்து, பெருமானாருக்கென அவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும் கவர்ந்து சென்றனர்

சிறை பிடிக்கப்பெற்ற யெமன் நாட்டு மன்னரையும் அவர்தம் மைந்தரையும் அவர்தம் ஆட்களையும் இஸ்லாத்தின் விரோதியாக விளங்கிய சிற்றரசன் அப்துல் ரஹ் மானின் முன் கொண்டு நிறுத்தினர் முன் பின் அறியாத அச்சிற்றரசன் யார் என்பதை அறிகிலிருந்தவர்களிடம் அசுமத் கேட்டபோது.

'பதியினில் சிறந்த மக்கமா நகரில்
    பரிவுடன் இருந்தனிந் திலங்கும்
மதினா புரத்தில் வருமகுமூது
     நபிமரபி னில் அபூ பக்கர்
சுதன் இவர் தமருமனையும் அத்தனையும்
    சுருதியின் வழிமுறை விடுத்தே
அதிகநல் வளம்சேர் இவ்வரை அடைந்தார்
     அவர்க்குறும் பெயர் அப்துர் ரகுமான்"

என அறிந்தபோது பெரிதும் மகிழ்ந்தார். நபிவழி வந்தவர். இறைதூதரின் அன்புத் தோழர் அபூபக்கர் சித் தீக்கின் மைந்தர். பெருமானாரைக் காணச் செல்லும் செய்தி கேட்டால் பெரிதும் மகிழ்வார். உண்மை அறியாது கொள்ளையிட்ட பொருள்களை திரும்ப அளித்து அண்ணல் திருமுகம் காண அனுப்பிவைப்பாய் என்றெல்லாம் தனக்குள் எண்ணி மகிழ்ந்தார். அப்துர் ரஹ்மானை நோக்கி, தான் பெரும் பரிசுப் பொருள்களோடு இறை-