பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

சினத்தினோடும் விழிசிவந்து உரைத்த காட்சி'யை அப்படி யே நம் மனக்கண்முன் கொண்டு வருகிறார் புலவர்.

"வள்ளல் இறசூலுல்லா மனம்வெகுண்டு
     உரைத்த மாற்றம்
தெள்ளிய கருத்துள் மேவத் திறல்
     அபூபக்கர் கேட்டுக்
கள்ளவிழ் விசனக் கண்ணீர்
     கவின் மழை சொரிதலாகி
விள்ளரும் துயர வாரி மீதடைந்
    தழுவ தானார்"

அசுமத்தும் அவர் மைந்தரும் அடைந்த இன்னல் கேட்டு நெக்குருகி அழுதார் அபூபக்கர் சித்திக் அவர்கள். தம் மைந்தனின் தீச்செயல் கணடு கண்ணீர் உகுத்தார்.

துன்மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள தன் மகன் அப்துர் ரஹ்மானை துன்மார்க்கத்தின் பால் திருப்ப, தானே செல்ல அனுமதிக்குமாறு அபூபக்கர் சித்திக் அவர்கள் அண்ணலாரிடம் அனுமதி கேட்டு நின்றார். தம் ஆருயிர்த் தோழரின் உளப் பாங்கினை உணர்ந்த பெருமாாைர் 'அவ்வாறே செய்க என அபூபக்கர் சித்திக் அவர்கட்கு அனுமதி வழங்கினார்.

அரிமா போல் வீரத்திற் சிறந்த அபூபக்கர் சித்திக் அவர்கள் அண்ணலார் அனுமதி கிடைத்தவுடன் தன் மனை நோக்கிச் சென்றார். இக்காட்சியைக் காட்ட வந்த புலவர், அன்னாரின் அரிய வீரத்தையும் பொன்னால் பொறிக்கத்தக்க அவர்தம் பெயர் மாட்சியையும் அழகுற விவரிக்கிறார். மயில் போன்ற ஒயிலான தோற்றப் பொலிவையும் கூரிய விழிகளையும் அழகு மொழி பேசும் பவளச் செவ்வாயையும் உடைய அவர் தம் துணைவியார் உம்முருமானின் சோலை சூழ்நிலையை அடைந்ததை,

"அரியவன் துTதர் கூற அரியினிற்
     பொறித்த நாமத்து