பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அவர்கட்கு மிகவும் பிடித்தது. அன்பு வழியில் அமைதியான போக்கில் தன் மகனைத் தீனின் வழியில் திருப்ப, முர்ரத் கூறியவாறே செய்வதாகக் கூறி வல்ல அல்லாஹ்வின் இன்னருளை இறைஞ்சி முடங்கல் எழுத முனைந்தார். கடிதத்தின் தொடக்கமே கல்லையும் கரையச் செய்யும் உருக்கத்துடன் அமைந்தது தன் மைந்தன் மீதுள்ள பாசத்தையெல்லாம் பிழிந்தெடுத்து உருவாக்கிய சொற்களால் முடங்கள் வாசகங்களை முடைந்தார்.

"என் கண்மணியே இருதயக் கனியு ளாய்எம்
அங்கமதில் ஆவியெனும் அப்துல் ரகுமானே
வெங்கரியின மிக்க விறல் மேவு சுதனே! நீ
சங்கை மாநகர் தனைப் பிரிதலாலே."

எனத் தன் யிரிவாற்றாமையைக் குறித்து எழுதிய அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மதனின் பிரிவால் குடும்பத்தார் அடைந்த மனத் துன்பத்தை அவலச் சுவை ததும்ப,

"மன்னர் மகிழ் நின் றனை வருத்த முற ஈன்ற
அன்னையும் உடன் பிறவி யான ஆயிஷாவும்
பன்னரும் தமர்களோடு பார்த்திபனாம் யானும்
உன்னை நினைவுற்றுருகி ஊண்துயிலும் அன்றோம்’

எனப் பிரிவுத் துயரை நெஞ்சுருகக் கூறி புத்திரசோகத்தை புலப்படுத்தும் அதே சமயத்தில் குபிர் வழி நடந்து நல்லோர்க்குத் தொல்லையும் துயரமும் தந்துவரும் வழி கேட்டினையும் சுட்டிக் காட்டி,

"வள்ளல் மகுமூதடி வணங்க வருகின்றோர்
துள்ளுபரி நன்னிதிகள் துரசு நெடுஞ்சோகும்
கொள்ளை கொடுபோய் உயிர்கள் கொண்ட படியாலே
உள்ளம் எயிறண்ணமும் மெலிந்து கருகிற்றே

"