பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151



விந்தைசேர் இனத்தோர் கூடி
விலக்கவே வேலை ஐயா!”

எனப் பெற்றோர் நிலையைக் கூறினார். தனை ஈன்று வளர்த்த தாய் தந்தை மீது அனபும் வாஞ்சையும் பொங்கியெழத் தொடங்கியது. பெற்றோரைக் காணும் நாள் எந்நாளோ என ஏங்கினார். அவருள் அடைபட்டிருந்த பாசம் உணர்ச்சிப் பிரவாகமாக வெளிப்பட த் தொடங்கியது.

அச்சமயம் அங்குவந்த அப்துல் ரஹ்மானின் மாமனாரும் இஸ்லாத்தின் பரம வைரியுமான அபுசுப்யான் பணயச் சிறுவனைக் கொல்லாத காரணம் கேட்டு நின்றான். அதற்கு மறுமொழி கூறிய மருமகன் அப்துர் ரஹ்மான் என் தந்தையின் பேரால் கொல்லாது விடுக! எனக் கூறியதால், அச்சிறுவனைக் கொல்லாது உயிர்ப் பிச்சை தந்து அபயமளித்ததாகக் கூறினார்.

அப்துர் ரஹ்மானின் மன மாற்றத்திற்கும் காரணமான அபூபக்கர் சித்தீக் (ரலி) மீது மிகுந்த வெறுப்புக் கொண்டான். என் மருமகனின் மனந்திருந்தக் காரணமான அபூபக்கர் சித்தீகை அழிக்கப் போவதாக ஆர்ப்பரித்தான்.

தன் தந்தையை"இழித்துப் பேசி வெஞ்சினம் கூறிய மாமனார் அபுசுப்யான் மீது அடக்கொணா வெறுப்புக் கொண்டார் அப்துர் ரஹ்மான். இதுவரை அவருள் கசிந்து கொண்டிருந்த தந்தை பாசம் வெள்ளமாக வெளிப்பட்டது.

தன் தந்தையின் பெருமையை பலபட உணர்ந்தார். அபூபக்கர் சித்தீக்கின் அருமை பெருமை அறியாது அற்பத் தனமாகத் தரம் தாழ்த்திப் பேசிய தன் மாமனார் மீது மட்டற்ற கோபம் கொண்டார். அன்பு மகன அப்துர் ரஹ்மான். தன் தந்தையின் அறிவு. ஆற்றல். வீரம்