பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

"ஏதென்றீர் சாணாகமிட்டாற்போ மெங்களெச்சில்
சூதொன்று முங்களெச்சில் சுட்டாற்போ மென்ற துங்கன்"

எனக் கூறிப் புலப்படுத்துகிறார்.

அடுதது, மணமகனாகிய செய்தக்காதியின் வீரமிக்கக் குலப்பெருமை பேசி, அவர்கள் வணிக நிமித்தம் சென்று வரும் நாடுகளையெல்லாம் வரிசைப்படுத்தி, அவர்கள் அங்கெலலாம் விற்கும் பொருள்களின் பட்டியலையும் தருகிறார்.

மணமகனின் வீரம், கருணை, வாய்மை, பொறுமை, அறிவு ஆற்றல் ஆகியவற்றை பலபட பாராட்டிய நூலாசிரியர் அடுத்து, மணமகனின் ஒழுக்கத்தை இறை நெறி போற்றும் செந்தண்மையை எடுத்துரைக்கிறார்.

"ஆதி யொருபொருளை அஞ்சுவத்தும் தப்பாமல்
நீதி யுடன் வணங்கு நேமமற வாதபிரான்
செப்பரிய ஹஜ்ஜு வண்ணம் செய்கின்ற சக்காத்து
முப்பது நோன்பும் முடிக்குந் தபோதனன்காண்
அய்யா நபுல்நோன்பும் ஆசுறா நன்னோன்பும்
நையாமல் ஆசார நன்னோன்பு நோற்பவன் காண்"

என்றெல்லாம் கூறி தீனெறி போற்றும் தகைமையைப் பாராட்டுகிறார்.

அதன் பிறகு நிச்சியதார்த்தம் முகூர்த்தக்கால் நாட்டின் செய்திகளையெல்லாம் சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர்.

மணப்பந்தல் அலங்காரத்தைச் சற்றுவிஸ்தாரமாகவே வர்ணிக்கும் ஆசிரியர், மணப்பந்தல் மலர்ப் பந்தலாகவே மாற்றப்பட்டிருக்கும் விந்தைமிகு காட்சியை,

"மல்லிகையுஞ் செம்பகமும் வாய்ந்தகுட மல்லிகையும்
முல்லையொரு பிச்சி முறை முறையாய் முன் தூக்கிச்