பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

மின்சாரமோ மண்ணெண்ணெய் விளக்குகளோ இல்லாத காதமாதலின் வெளிச்சம் தருவதற்கு தீவட்டிகள் தான் இம்மாதிரி ஊர்வலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இத்திருமண ஊர்வலத்தில் தீவட்டிகளில் தான் எத்தனை வகை,

"தங்கத்தி வட்டி தயங்கு வெள்ளித் தீவட்டி
கங்குல் பகலாக்கும மாறுகால் பந்தமுடன்
ஏணி விளக்கும் ரதவிளக்குந் தன்னுடனே
பாணி விளக்கும் பகல்விளக்கும் நின்றிலங்கச்
சூல விளக்குந் துலங்கைந்து கால்விளக்கும்
ஞானம் விளக்கும் பகலா மெனவிலக"

என்று கூறி விளக்குகிறார் நூலாசிரியர்.

மணமகன் வரும் தெருவெல்லம் தோரணம் காட்டி அழகு செய்யப்பட்டுள்ளது எழுவகைப் பருவமகளிரும் பவனி வரும் மணமகன் செய்தக்காதியை எதிரே கண்டு வியந்து போற்றிப் புகழுகின்றனர். இத்தகையபுகழுரைகள் இலக்கிய மெருகேறிய எழில் மிகு பாடல்களாக நயமுடன் எழுதப்பட்டுள்ளன. செய்தக்காதியை இராமனோடும், இந்திரனோம்ப அரிச்சந்திரனோடும் ஒப்பிட்டுப் போற்றுகின்றார்.

"பெருமானை காத்தினிய பொன்மானை ஓடியெய்து
திருமானை வைத்தபுயன் சீமான்"

என இராமனின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியோடு இணைத்துப் பரராட்டிக் கூறுவது நயமாக உள்ளது.

மணமகனின் ஊர்வலம் இருபத்திமூன்று வகை வான வேடிக்கைகளோடு நடைபெறுகிறது. வாணவெடிகளுக்கும் இத்தனை பெயர் உண்டா என வியக்கத் தோன்றுகிறது

மணமகனைப் போன்றே மணமகளைப்பற்றிக் கூறும் போது மணப்பெண் அணிந்த ஆடைவகைகளும் அணிந்த